கருகருவென நீளமாக கூந்தல் வேண்டுமா?

பொதுவாக பெண்களுக்கு தங்களது கூந்தல் கருகருவென இருக்க வேண்டும் என்ற ஆசை காணப்படும்.

ஆனால் இந்த காலக்கட்டத்தில் சூழல் மாசடைவு, முறையற்ற பழக்க வழக்கங்கள் போன்றவற்றால் முடி உதிர்வுவை அதிகமாக சந்திக்கின்றனர்.

அதிலும் சிலருக்கு முடி கொட்டினாலே மன அழுத்தம் ஏற்படும். நீங்கள் உங்களின் கூந்தலுக்கு மிகுந்த கவனம் அளிக்க வேண்டும்.

அவர்கள் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்குவதை தவிர்த்து விட்டு கீழ் காணும் ஆரோக்கியமான எண்ணெயை தலைக்கு வைத்து வந்தாலே போதும். நாளடைவில் நல்ல மாற்றத்தை காணலாம்.

தற்போது இந்த இயற்கை எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • ஒரு கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்
 • 3 ஆம்லா (நெல்லிக்காய்)
 • 2 தேக்கரண்டி கறுப்பு எள் விதைகள்

செய்முறை

 • ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயில் தேவையான அளவு கறுப்பு எள்ளை சேர்த்து, அதை நாள் முழுவதும் ஊற வைக்கவும். கறுப்பு எள்ளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் தற்போது அந்த எண்ணெயில் இருக்கும்.
 • ஆம்லாவை ( நெல்லிக்காயை) நன்றாக கலப்பான் வைத்து தட்டி வைத்துக் கொள்ளவும்.
 • தட்டி வைக்கப்பட்ட ஆம்லா உடன், கறுப்பு எள் கலந்த எண்ணெயை சேர்க்கவும்.
 • இந்த கலவையை, குறைந்த வெப்பநிலையில், 2 நிமிடங்கள் சூடுபடுத்தவும். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்றாக கலப்பதை கண்கூடாக காணலாம்.
 • இதை ஆற வைக்கவும். பின் இதை நன்றாக கலக்கவும். பின் மீண்டும் இந்த கலவையை குறைந்த வெப்பநிலையில், 2 மணிநேரத்திற்கு சூடுபடுத்தவும்.
 • பின் இதை குளிர்விக்கவும். வடிகட்டியை கொண்டு இந்த கலவையை வடிகட்டவும். கறுப்பு எள் கலந்த ஆம்லா ஹேர் ஆயில் தயார்.
 • கறுப்பு எள் கலந்த இந்த ஆம்லா ஹேர் ஆயிலை, வாரத்திற்கு ஒருமுறை தலையில் தடவி வந்தாலே பலன்களை கண்கூடாக காணலாம்.
 • இந்த ஆம்லா ஹேர் ஆயில்,முடி வளர்ச்சிக்கு ஏற்றதாக இருப்பதோடு மட்டுமல்லாது, முடிகளில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதோடு, கூந்தல் வலுவுடன் இருக்கவும் உதவுகிறது.

Sharing is caring!