கருஞ்சீரக ஷாம்பு கூந்தல் பராமரிப்புக்கான சிறந்த உணவு

“சிகைக் கழுவி” ஷாம்பு ( Shampoo) எனப்படுவது, நம் தலைமுடிகளில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தி கொண்டு வரும் ஒரு திரவம். “முடி சீராக்கி” (hair conditioner) என்பது முடியின் அமைப்பினையும், தோற்றத்தினையும் மாற்றுவதற்காக நாம் பயன்படுத்தி வருகிறோம்.

இது தலைமுடிக்கு நல்லதொரு பயன்பாட்டினை தருகிறது. இது “மாய்ஷரைசர்” (moisturizer)  எண்ணெய்கள் மற்றும் வெப்ப திரை (sun screen)  உட்பட பல்வேறு  பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

சந்தையில் பலதரப்பட்ட ஷாம்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் நம் தலைமுடி ஆரோக்கியமாக வளர நமக்கு இயற்கை அளித்த ஒரு வரம்தான் “கருஞ்சீரகம்”. கருஞ்ரகத்தின் விதைகள் பல நூற்றாண்டுகளாக  தலை முடி பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கருஞ்சீரகத்தின் பயன்கள்:

நம் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும், அற்புத குணங்களையும் கொண்ட கருஞ்சீரகம் இறைவன் அளித்த ஒரு வரப்பிரசாதம். இது இறப்பை தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்த கூடியது என்றால் அது மிகையாகாது. இதில் நம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், வைட்டமின் பீடா-கரோடின், கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

Sharing is caring!