கரும்புள்ளிகளால் உங்கள் முகம் அசிங்கமாக இருக்கா?

கரும்புள்ளி பெரும்பாலும் முகத்திலும் அசிங்கமாக தழும்புபோல் காணப்படும். கிருமிகள் , இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும்.

இது சிலருக்கு மூக்கைச் சுற்றி சொரசொரப்பாகவும், சிறு புள்ளிகளாகவும் இருக்கும்.முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருந்தால் கரும்புள்ளி வர நிறைய வாய்ப்பு இருக்கிறது.

அந்தவகையில் இதனை போக்க சில எளிய இயற்கை முறைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

  • அரிசி மாவை தண்ணீர் விட்டு கிரீம் போல் கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.
  • வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.
  • இலுப்பை இலையை மைபோல் அரைத்து இரவில் பூசி காலையில் கழுவி வர கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.
  • கொத்துமல்லி மற்றும் மஞ்சள் கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.
  • ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.
  • இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.
  • உருளை கிழங்கை வெட்டி கரும்புள்ளிகள் மீது தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.
  • மஞ்சளுடன் கருவேப்பிலை சாறு சேர்த்து முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.
  • பாதாம் பருப்பு பொடி 1/2 ஸ்பூன் கடலைமாவு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன் மூன்றையும் கலந்து பசை போல் செய்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து கழுவி வர கரும்புள்ளி, வடுக்கள் மறையும்.

Sharing is caring!