கருவளையங்களை எளிதில் போக்கனுமா?

கருவளையம் முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான்.

கண் கருவளையம் என்பது கண்களுக்கு கீழே உள்ள தோல் பகுதி மட்டும் கறுத்து காணப்படுவதாகும்.

இது அளவுக்கு அதிகமான வேலை இருப்பதால், உடலிலும், மனதிலும் அழுத்தமானது அதிகமாக ஏற்படும். இந்த செயல் கண்களைச் சுற்றி ஒரு வளையம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

அவற்றை மறைக்க பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது உண்மையில் நிரந்த தீர்வை தராது.

இதற்கு இயற்கை முறையில் எந்த பக்கவிளைவுகளும் இன்றி எளிதில் போக்கலாம். அதில் தேன் கருவளையத்தினை போக்க சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.

தற்போது தேனை கொண்டு கருவளையத்தினை எப்படி போக்கலாம் என பார்ப்போம்.

  • தேனை தினமும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கருவளையம் நீங்கி, கண்களும் பொலிவோடு இருக்கும்.
  • 1:2 என்ற விகிதத்தில் வெள்ளரிக்காய் சாறு மற்றும் தேனை எடுத்து நன்கு கலந்து, அதனைக் கொண்டு, தினமும் தடவி ஊற வைத்து கழுவி வரவும். இப்படி ஒரு மாதம் செய்து வந்தால், உங்கள் கண்கள் கவர்ச்சிகரமாக காணப்படுவதை நீங்கள் காணலாம்.
  • பாதாம் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் தேனில் 4-5 துளிகள் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் கருவளையம் விரைவில் நீங்கும்.
  • வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் சேர்த்து கலந்து, அக்கலவையை கண்களைச் சுற்றி தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கருவளையங்கள் நீங்குவதோடு, கண்களில் உள்ள வீக்கமும் போகும்.
  • தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் விரைவில் அகலும்.

Sharing is caring!