கழுத்தில் உள்ள கருமையை போக்க வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு கழுத்திற்கு பின்புறத்தில் கருமையான படலம் படர்ந்து அசிங்கமாக காணப்படுவதுண்டு.

இதற்கு என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும் கழுத்தில் உள்ள கருமை நீங்காமல் இருக்கும்.

அதற்கு பதிலாக சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு கழுத்தைப் பராமரித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் சமையலறையில் உள்ள சில பொருட்களில் ப்ளீச்சிங் தன்மை இருக்கிறது.

அந்தவகையில் கழுத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் அந்த சமையலறைப் பொருட்கள் என்னவென்றும், அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையானவை
  • ஓட்ஸ் -2 டேபிள் ஸ்பூன்
  • தயிர் அல்லது யோகார்ட் -2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – சில சாறு
செய்முறை

முதலில் மேற்கூறிய பொருட்களை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து, கலவையாக கழுத்தில் போட்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

20 நிமிடங்களுக்கு பிறகு,வெதுவெதுப்பான நீரினில் கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், கருமையற்ற, மிருதுவான கழுத்து திரும்ப உங்களுக்கு கிடைக்கும்.

அதனுடன் கழுத்திற்கு முறையான பயிற்சி செய்தால், கழுத்தில் எக்ஸ்ட்ரா சதை தொங்காமல், அழகாய் வைத்திருக்கலாம்.

நன்மைகள்
  • ஓட்ஸ் கழுத்திலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. கருமையை போக்கி நிறத்தினை கூட்டுகிறது.
  • தயிர் ஒரு இயற்கையான ப்ளீச் என்றால் இது கருமையையும் சருமத்தில் படியும் அழுக்குகளையும் சீக்கிரம் அகற்றிவிடும்.
  • கழுத்தில் தொற்று இருந்தாலும், கருமையாகும். இதனை நீக்குவதில் தயிரின் பங்கு முக்கியமாகும்.
  • எலுமிச்சையும் இயற்கையான ப்ளீச் என்பதால் கருமை நிறத்தை போக்கி, அழுக்கு, எண்ணெய் பசையை போக்குகிறது.

Sharing is caring!