கால் நகத்தைப் பராமரிக்கனுமா? அப்போ இதை செய்யுங்கோ

நம்மில் பலரும் கை நகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியைக் கூட கால் நகங்களுக்குக் கொடுப்பதில்லை. இது ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கின்றது.

கைகளைப் போல் கால் நகங்களை பராமரிப்பதும் முக்கியமானது ஆகும். இதற்காக அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை்.

வீட்டில் இருந்து கூட எளிய முறையில் கால் நகங்களை பராமரிக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பாத நகங்களை அதிகம் வளரவிடக்கூடாது. ஏனெனில் அவை அடர்த்தியாக வளர்ந்து திக்காகிவிடும். அதனால் சதையில் குத்தி காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் விரலைத் தாண்டி வளர விடாமல் வெட்டி விட வேண்டும்.
  • பெரும்பாலும் கால் நகங்கள் கடினமாக இருக்கும். அதனால் குளித்தவுடன் நகம் வெட்டினால், அந்த வேலை ஈஸியாக முடியும். இல்லையெனில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி சில நிமிடம் கழித்தும் வெட்டலாம்.
  • படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்த பின்போ, உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவுங்கள். இதனால் பாதத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகும்.
  • பளபளப்பான நகங்களுக்கு கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக மாறும்.
  • பாதாம் எண்ணெய்யை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். இதை மாத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
  • ஆலிவ் எண்ணெய்யை மிதமான சூட்டில் விரல்களில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர, நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.
  • நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்குறைபாடே காரணம். அதனால் நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

Sharing is caring!