குளிர்காலத்தில் எந்த பேஷியல் செய்வது சரியானது… உங்களுக்கான டிப்ஸ்!!!

குளிர்காலத்தில் என்ன பேஷியல் செய்தால் நன்றாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். பேஷியல் செய்யும்போது முகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை அழகாக காண முடியும்.

குளிர்காலத்தில் சருமத்திற்கு பழங்களைக் கொண்டு பேஷியல் செய்து வரலாம். வாழை, தர்பூசணி, கிவி போன்றவை உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து ஜொலிப்பாக்கும்.

குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று முகத்தில் படும்போது, சருமம் வறண்டு போய் ஈரப்பதமின்றி இருக்கும். இதனால் சருமத்தில் வெடிப்பு, வறட்சி நிலவக்கூடும். குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். இதனால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே இதற்கு பேஷியல் க்ரீம், மாய்ஸ்சரைசர், சீரம், பேஸ் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

பேசியலை தவிர குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். சூடான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ குளித்தால் சருமம் மேலும் வறண்டு போய் விடும். அத்தியாவசிய எண்ணெய்களை குளிக்கும்போது பயன்படுத்தி வரலாம்.

நீராவி பிடிக்கும் முறையை பின்பற்றலாம். இது குளிருக்கு இதமாக இருப்பதோடு உங்கள் சருமமும் பொலிவாக இருக்க உதவும்.

Sharing is caring!