கூந்தலின் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கனுமா?

இன்று ஆண், பெண் இருவருமே அன்றாடம் கூந்தல் பிரச்சினைகள் பலவற்றை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக கூந்தல் பிரச்சினைகளில் தலை முடி உதிர்வு, வழுக்கை, சொட்டை, இளநரை, செம்பட்டை புழுவெட்டு என்று பலவகைகள் உள்ளன.

இதற்காக பணத்தை செலவழித்து பலவகை முடி வளரும் மருந்துகள், கண்ட கண்ட எண்ணெய்கள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதிலே நேரத்தை செலவழித்து கொண்டு இருக்கின்றனர்.

இது சில சமயங்களில் இது அலர்ஜி, சரும பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்திவிடுகின்றது. இதுபோன்ற கூந்தல் பிரச்சினைகளில் இருந்து விடுபட சில இயற்கை வழிமுறைகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பாரப்போம்.

 • வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
 • கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
 • வெந்தயம் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
 • கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலைக்கு தடவி வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் முடி நன்றாக வளரும்.
 • நெல்லிக்கனியை தினமும் உணவில் சேர்த்து வர இளநரை பிரச்சனை சரியாகும்.
 • ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
 • அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து, கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
 • மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
 • தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும்.
 • கறிவேப்பிலையை நன்றாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தடவி வர முடி நன்றாக வளரும். கேரட் மற்றும் எலுமிச்சை பழசாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தடவி வந்தாலும் முடி நன்றாக வளரும்.
 • நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

Sharing is caring!