கூந்தலுக்கு ஆதாரம் புரதம்

90 சதவிகிதம் முடிகள் வளரும் நிலையில் இருக்கும், 10 விகிதம் முடிகள் உறங்கிக் கொண்டிருக்கும். ஓய்வு நிலையைக் கடந்த பின், முடிகள் உதிரத் தொடங்கும். புது முடிகளும் வளரும். அதாவது 50100 முடிகள் வரை உதிர்ந்தால், அது இயல்புதான்.

புரதம் என்பது அமினோ அமிலங்கள் நிறைந்தவை. முடி, புரதத்தால்தான் உருவாகிறது. முடி வளர்வதற்கு அமினோ அமிலங்களும், புரதமும் அவசியம்.

இறைச்சி, மீன், முட்டை, நட்ஸ், பயிறு வகைகள், சிக்கன், சோயா, பால் ஆகியவற்றில் புரதம் நிறைந்துளது.
கர்ப்பிணிப் பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு…
 குழந்தை வயிற்றிலிருக்கும் போது கூந்தல் உதிர்வது இயல்பு. இதற்கு ஊட்டச்சத்துக்களை சமன்படுத்தினாலே போதும், இயற்கையாகக் கூந்தல் வளர்ச்சி பெறும்.
 ஜின்க், ஃபோலிக் அமிலங்கள், வைட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
 அடர் பச்சை நிற காய்கறிகள், தோல் நீக்கப்பட்ட இறைச்சி, முழு தானியங்கள், பச்சைப் பட்டாணி, பயறு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
 டை பயன்படுத்தல் கூடாது. தேவையெனில் ஹென்னா பயன்படுத்தலாம்.
 வாழை மற்றும் மெலான் வகை பழங்களை சாப்பிடுவதால், கூந்தல் நன்கு வளரும்.
 ஒரு கப்பில் ஆலிவ் எண்ணெய், ரோஸ்மெரி எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, எலுமிச்சைச் சாறு இவற்றையெல்லாம் தேவையான அளவில் கலந்து கூந்தலில் பூசிவந்தால், இயற்கையாகவே கூந்தல் வலுப் பெறும்.
 ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை சமஅளவில் எடுத்து, ஸ்கால்ப்பில் மசாஜ் செய்துவந்தால் கூந்தல் வலிமை பெறும்.
 தேங்காய் பாலை கூந்தலில் பூசி 2030 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பூவால் கூந்தலை அலசலாம்

Sharing is caring!