கூந்தலை கருமை நிறத்துடன் மாற்ற வேண்டுமா??

பெரும்பாலான மற்றும் ஆண்களுக்கு தங்களின் தலை கூந்தல் நிறமானது கருமை நிறத்தில் தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆண்களை விட பெண்களுக்கு அவர்களின் கூந்தலை கருமை நிறத்துடன் பராமரிக்க வேண்டும் என்ற ஆவலானது அதிகளவில் இருக்கும்.

அந்த வகையில்., தலை கூந்தலின் நிறத்தை மாற்றுவதற்கு கெமிக்கல் கலந்த பல பொருட்களை உபயோகம் செய்து தங்களின் கூந்தல் அழகை அவர்களே கெடுத்து விடுகின்றனர். இயற்கையான முறையில் கூந்தலின் அழகை மேற்கூட்டுவதற்கு மருதாணி இலையை எப்படி பயன்படுத்தலாம் என்று இனி காண்போம்.

தேவையான பொருள்கள்:

மருதானி இலைகள்.,
தேங்காய் எண்ணெய் – 500 மில்லி லிட்டர்.

தயாரிக்கும் முறை:

எடுத்துக்கொண்ட மருதானி இலைகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். முடிந்தளவு மருதானி இலைகளை அரைக்கும் போது குறைந்தளவு நீரை சேர்த்து அரைக்க வேண்டும்.

பின்னர் அதனை நெல்லி காய்களை போல உருட்டி காயவைத்து கொள்ள வேண்டும். பின்னர் எடுத்துக்கொண்ட தேங்காய் எண்ணெய்யை வானெலியில் ஊற்றி., உருட்டி வாய்த்த மருதானி இலைகளின் உருண்டையை எண்ணையில் சேர்த்து கொதிக்க வைத்து., பிரவுன் நிறத்தில் மாறியவுடன் இறக்கவும்.
இந்த எண்ணெயானது நன்றாக ஆறியவுடன் காற்று நுழைய முடியாத கேனில் அடைத்து வைத்து தினமும் தலையில் தடவி வந்தால் கூந்தலானது கருமை நிறத்துடனும் தோற்றமளிக்கும் மற்றும் பிற கூந்தல் பிரச்சனைகளும் நீங்கும்.

குறிப்பு: இந்த எண்ணையை தயாரிக்கும் போது செம்பருத்தி பூக்கள் மற்றும் கருவேப்பிலையை சிறிதளவு சேர்த்துக்கொள்ள விரும்பினால் சேர்த்து கொள்ளலாம்.

Sharing is caring!