கூந்தல் நன்கு வளர வேண்டுமா?

பெண்கள் அனைவருக்குமே நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது வெறும் கனவாகவே உள்ளது.

அனைவருக்குமே கூந்தல் நன்கு வளர வேண்டுமெனில், தினமும் எண்ணெய் தடவி, கூந்தலை கட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்று தெரியும். இது பழைய ஃபேஷன். ஆனால் பலர், வேலைக்கு செல்லும் போது அழகாக செல்ல வேண்டுமென்றும், பழைய ஃபேஷனை தவிர்த்துவிடுகிறோம். பின் கூந்தல் வளரவில்லையே என ஏங்குகிறோம். எவ்வளவு தான் பழைய ஃபேஷனாக இருந்தாலும், அதுவே சிறந்தது. எனவே அழகான, நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமெனில், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று ஒருசில முக்கியமான செயல்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், கூந்தலின் வளர்ச்சியை நிச்சயம் அதிகரிக்க முடியும்.

எண்ணெய் குளியல்:

வாரத்திற்கு ஒரு முறையாவது, எண்ணெய் குளியலை மேற்கொள்ள வேண்டும். அதுவும் வார இறுதியில் இரவில் படுக்கும் போது எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் எழுந்து கூந்தலை அலசினால், கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.

வைட்டமின் ஈ உணவுகள்:

வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம். அதிலும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்த உணவுகளான பாதாமை தினமும் சாப்பிடுவது நல்லது.

Sharing is caring!