கேரட் – வாழைப்பழ மாஸ்க்; உங்களின் கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணை நிற்கும்

கூந்தல் அழகை பராமரிக்க…. முடி மென்மையாக இருக்க, முடி உதிராமல் இருக்க, முடி கருமையாக இருக்க என்று பல்வேறு வழிமுறைகளில் கூந்தல் அழகை நாம் பராமரித்து வருகிறோம். அந்த வகையில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கேரட் – வாழைப்பழ மாஸ்க் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் முடியை பராமரிக்க ஒரு அற்புத பொருள் உண்டு. அதுவே கேரட். உங்க கூந்தலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் ஒரு பொருள் கேரட். பல்வேறு முக்கிய நன்மைகளை கூந்தலுக்கு தரும் சாத்தியங்களைக் கொண்டதாக கேரட் இருப்பதால், பல்வேறு கூந்தல் பராமரிப்புப் பொருட்களில் கேரட் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இப்படி வெளிதயாரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே கேரட் கொண்டு நமது கூந்தல் அழகைப் பராமரிக்க முடியும்.

பல்வேறு செயற்கை பொருட்கள் மற்றும் ரசாயனங்களுடன் சேர்த்து தயாரிக்கப்படும் இத்தகைய பொருட்களை சந்தையில் வாங்குவதை விடுத்து வீட்டிலேயே கேரட் கொண்டு தயாரிக்கும் ஹேர் பேக் அல்லது ஹேர் மாஸ்க் உங்களுக்கு சிறப்பான நன்மைகளைத் தரும். உங்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு கேரட் பயன்படுத்தி செய்யும் இந்த தீர்வுகளை முயற்சித்துப் பாருங்கள்.

கேரட்டுடன் இதர மூலப்பொருட்களை சேர்த்து உங்கள் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவோம்.

தேவையான பொருட்கள்: கேரட் – 1, வாழைப்பழம் – 1, யோகர்ட் – 2 மேசைக்கரண்டி.

பயன்படுத்தும் முறை: மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக அரைத்து ஒரு மென்மையான விழுதாக்கிக் கொள்ளவும். உங்கள் உச்சசந்தலையில் இந்த விழுதைத் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். உங்கள் உச்சந்தலையில் உள்ள எல்லா முடிகளிலும் இந்த விழுது இருக்கும்படி முழுவதுமாகத் தடவவும்.

அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும். பிறகு மென்மையான மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இந்த மாஸ்க்கை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

Sharing is caring!