கைகள், கால்களின் வறட்சியை போக்க வேண்டுமா?

பொதுவாக மழை மற்றும் குளிர் காலத்தில் சருமம், ஈரத்தன்மையை இழந்து சொரசொரப்புத் தன்மை, வறட்சி போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று.

இதற்கு கிரீம்களை விட இயற்கை முறையின் மூலம் எளிதில் நீக்க முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • குளிர்காலத்தில் ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது கை, கால்களுக்கு தடவி வந்தால், சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, கை, கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.
  • மில்க் கிரீம் கொண்டு தினமும் மசாஜ் செய்து வாருங்கள். ஏனெனில் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்கள் உருவாக வழிவகுக்கும்.
  • தேனை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து, அதோடு சிறிது சர்க்கரை கலந்து சருமத்தை ஸ்கரப் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி, சருமத்தின் ஈரப்பசை அதிகரித்து, சருமமும் பொலிவோடு இருக்கும்.
  • குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.
  • தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கை, கால்களுக்கு தடவி வந்தால், கைகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்.
  • தினமும் பாலை கை மற்றும் கால்களுக்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தால், கைகளுக்கு ஈரப்பசை கிடைத்தவாறும் இருக்கும், கைகளில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.
  • ஓட்ஸ் பொடி செய்து, பால் சேர்த்து கலந்து, அதனை கைகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கைகளில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதோடு, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

Sharing is caring!