கை, கால் மூட்டுகளின் கருமையை எளிதாக போக்கலாம்…

நல்ல  நிறமாத்தான்  இருக்கேன். ஆனா இந்த கை, கால் மூட்டு மட்டும் கருப்பா இருக்கு என்று. சொல்வார்கள்.   வெள்ளையாக இருப்பவர்கள் மட்டுமல்ல மாநிறங்களில் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்னைகள் உண்டு. பெரும்பாலும் இந்த புலம்பலை பெண்களிடமே அதிகம் எதிர்பார்க்கலாம்.

குழந்தைகள் தவழும் பருவத்தில் கால் மூட்டுகளில் அதிக அழுத்தம் கொடுப்பதால் அது வளரும் போது முட்டி ஒரு நிறமாகவும், கால்கள் ஒரு நிறமாகவும் பார்க்க வித்தியாசத்தைக் கொடுக்கிறது.  வளரும் போது நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது இந்த இடத்தில் சருமம் வறண்டு இறந்த செல்களை இங்கேயே தேக்கி வைத்துக்கொள்கிறது. இதனால் இந்தப் பகுதி கடினமாகவும் கருமையாகவும் மாறிவிடுகிறது.

வளர்ந்த பருவத்தில் அதிகரிக்கும் இந்த மூட்டு கருமை பாதிப்பை எளிதில் சரி செய்ய முடியாது என்றாலும் வீட்டு வைத்தியம் செய்து நாளடவில் மூட்டில் இருக்கும் கருமையை முழுமையாக நீக்கி விடலாம். மூட்டுக்களை மென்மையாக்கினாலேயே கருமை அகன்று பளிச்சென்று இருக்கும்.

மூட்டுபகுதிக்கு முதலில் தேவை  இரத்த ஓட்டத்தை சீராக்குவதுதான். மூட்டுப் பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக்கலாம். இரத்த ஓட்டம் சருமத்துக்கு மென்மையைக் கொடுத்து கருமையைப் போக்கும்.

இரவு நேரங்களில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், விட்டமின் ஏ (மாத்திரைகளில் கிடைக்கும்) எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒரு எண்ணெயை ஒரு டீஸ்பூன் எடுத்து உள்ளங்கைகளால் தடவி மூட்டுகளைச் சுற்றிதடவி மசாஜ்  செய்யவும். மசாஜ் செய்யும் போது மேலிருந்து கீழாக கைகளை கொண்டு வராமல் கீழிலிருந்து மேலாக வட்டமாக மெதுவாக 10 நிமிடங்களுக்கு குறையாமல் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்வதால் இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள்  உருவாகும். இரத்த ஓட்டமும் சீராகும்.

Sharing is caring!