சருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்!

சருமத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளும் பராமரிப்புக்களுள் ஒன்று தான் கிளின்சிங். ஆரோக்கியமான சருமத்திற்கு அத்தியாவசியமான நான்கு படிகள் தான் எக்ஸ்போலியேட்டிங், கிளின்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங். இதில் கிளின்சிங் முறையின் போது சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படும். மேலும் கிளின்சிங் செய்தால், அது சருமத்தின் pH அளவைப் பராமரிக்க உதவும்.

கிளின்சிங் செய்வதற்கு மார்கெட்டில் ஏராளமான கிளின்சர்கள் விற்கப்படுகின்றனர். ஆனால் இந்த கிளின்சர்களில் கெமிக்கல் நிறைந்துள்ளதால், அனைத்துவிதமான கிளின்சர்களுமே அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. சில கிளின்சர் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் நம் வீட்டின் சமைலறையிலேயே சில நேச்சுரல் கிளின்சர்கள் உள்ளன. இந்த கிளின்சர்கள் சமையலறையில் பொதுவாக காணப்படும் பொருட்களாகும். அதோடு இந்த நேச்சுரல் கிளின்சர்கள் விலை குறைவானதும் கூட.

சரி, இப்போது சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் நேச்சுரல் கிளின்சர்கள் எவையென்று காண்போம். அதைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி, உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குங்கள்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி மட்டுமின்றி, சருமத்தை வறட்சியடைமல் தடுக்கும் மாய்ஸ்சுரைசிங் பண்புகளையும் கொண்டது. மேலும் இது சருமத்தில் இருந்து அதிகளவிலான அழுக்குகளை நீக்க உதவும்.

தேவையான பொருட்கள்:

* வெள்ளரிக்காய் – 1

* தண்ணீர்

செய்முறை:

வெள்ளரிக்காயை துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பின் ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி, அதில் வெள்ளரிக்காய் துண்டுகளைப் போட்டு, 8-10 நிமிடம் கொதிக்க வைத்து மூடி வைத்து குளிர வையுங்கள். பின் அந்த நீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து, 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அதுவும் தினமும் இந்த நீரை முகத்தில் தெளித்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி துடைத்தெடுங்கள்.

 

ஐஸ்

வீட்டில் இருக்கும் மிகச்சிறப்பான ஒரு கிளின்சர் தான் ஐஸ்.

தேவையான பொருட்கள்:

* ஐஸ் கட்டிகள் – 2-3

* ஒரு துணி

செய்முறை:

ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள். அதுவும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இப்படி செய்யக்கூடாது. இப்படி தினமும் ஒருமுறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள பண்புகள் சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.

தேவையான பொருட்கள்:

* எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர்

செய்முறை:

ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அத்துடன் சிறிது நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 5 நிமிடம் கழித்து, நீரால் கழுவ வேண்டும்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும்.

தேவையான பொருட்கள்:

* க்ரீன் டீ

செய்முறை:

ஒரு கப் க்ரீன் டீயைத் தயாரித்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அந்த க்ரீன் டீயை முகத்தில் தடவுங்கள். இப்படி தினமும் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக காட்சியளிப்பதோடு, சருமத்தில் உள்ள சுருக்கங்களும் மறையும்.

பப்பாளி

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-யுடன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இது சருமத்திற்கு புத்துயிர் அளித்து பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.

தேவையான பொருட்கள்:

* பப்பாளி – 1 கப்

* தண்ணீர்

செய்முறை:

பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை நீர் சேர்த்து கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். பின் அதை தினமும் முகத்தில் தெளித்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

Sharing is caring!