சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா?

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையே சிறந்தது என பலரும் கூறுகின்றனர்.

இதற்கு மாதுளை பெரிதும் உதவுகின்றது. ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.

இதனால் சருமத்தை இளமையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் வைத்துக் கொள்கின்றது.

அந்தவகையில் மாதுளையின் தோலை வைத்து எப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிப்பது என்பதை பார்ப்போம்.

செய்முறை
  • மாதுளை பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2-3 துளிகள்
  • தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • பால் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை

மாதுளை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்து வெளிக்காட்டும்.

இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குகின்றது.

மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முதுமைப் புள்ளிகள், கரும்புள்ளிகள், பருக்களால் வந்த தழும்புகள், கருவளையங்கள் போன்றவற்றை நீக்குவதோடு, சருமத்தின் நிறத்தை அதிகரித்து வெளிக்காட்டும்.

Sharing is caring!