சருமத்தை இயற்கை முறையில் ஜொலிக்க வைக்கனுமா?

பொதுவாக சிலருக்கு சருமம் எப்போதும் பொலிவிழந்து, பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும், அதற்காக அவர்கள் பலவகையான செயற்கை கிரீம் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

இருப்பினும் அவையெல்லாம் ஒரே இரவில் முகத்தை வெளுப்பாக்குமா என்றால் கேள்வி குறிதான்.

இதனை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட நமது சருமத்தை இயற்கை முறையில் அழகுப்படுத்த முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஓட்ஸ் – 1 டீஸ்பூன் , தேன் – 2 டீஸ்பூன் இரண்டும் மென்மையாக ஆகும் வரை கலக்கி ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். ஓட்ஸை நன்றாக விரல்களாலேயே நசுக்கி முகத்தில் தடவவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் காலையில் சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
  • பாலில் மஞ்சள் தூள் கலந்து குழைத்து முகம் முழுக்க தடவிகொள்ளுங்கள். இவை உலரும் வரை காத்திருந்து பிறகு படுக்கைக்கு செல்லுங்கள். தலையணையில் மஞ்சள் கறை படுவதற்கு வாய்ப்புண்டு என்பதால் பழைய தலையணை பயன்படுத்துங்கள். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். வாரத்தில் 3 நாட்கள் இதை செய்யலாம்.
  • முட்டையின் வெள்ளைக்கருவை முகம் முழுக்க தடவுங்கள். இதை முகத்தில் உலரவிடுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுவது நல்ல பலன் கொடுக்கும். உங்களுக்கு இதன் வாடை பிடிக்கமால் இருந்தால் 2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அல்லது மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவலாம். வாரத்தில் 2 அல்லது மூன்று முறை இதை செய்து வரலாம்.
  • க்ரீன் டீ – 2 டீஸ்பூன் , உருளைக்கிழங்கு சாறு – 2 டீஸ்பூன் இரண்டையும் சம அளவு கலந்து சுத்தமான பருத்தி உருண்டையை நனைத்து முகம் முழுக்க தடவி விடவும். இவை உலர உலர இரண்டு முறை தடவி பிறகு அப்படியே விட்டு மறுநாள் காலையில் முகத்தை கழுவ வேண்டும். வாரத்துக்கு மூன்று நாட்கள் இதை செய்யலாம். இயன்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை செய்யலாம்.
  • தக்காளியை இரண்டாக நறுக்கி அதை பாலில் தோய்த்துமுகம் முழுக்க தடவுங்கள். காய்ந்ததும் மீண்டும் அதன் மேல் இன்னொரு அடுக்காக இதை செய்யுங்கள். தக்காளியை காய்ச்சாத பாலுடன் கலந்து தேய்க்கவும். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவி விடவும். வாரம் மூன்று முறை இதை செய்யலாம்.
  • கற்றாழையுடன் வைட்டமின் இ மாத்திரை கலந்து முகத்தில் வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்தால் போதும். சிலருக்கு சருமத்தில் இது ஒவ்வாமையை உண்டாக்க செய்யும் என்பதால் முதலில் சருமத்தில் தடவி பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்துங்கள்.

Sharing is caring!