சருமத்தை பளபளவென வைத்து கொள்ளனுமா?

பொதுவாக அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சிலருக்கு ஏற்றதாக இருந்தாலும், சிலருக்கு பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடும்.

இருப்பினும் இன்றைய கால பெண்கள் செயற்கை அழகு சாதனப் பொருட்களேயே விரும்புகின்றனர்.

ஆனாலும் செயற்கை அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்களை பயன்படுத்துவதே எவ்வித பக்கவிளைவுமின்றி, சருமத்தை என்றும் அழகுடன் வைத்து கொள்ள முடியும்.

அந்தவகையில் தேன் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்தையும் பாதுகாக்க உதவி புரிகின்றது.

தற்போது தேனை கொண்டு சருமத்தை எப்படி பொலிவுடன் வைத்து கொள்ளலாம் என பார்ப்போம்.

  • வெதுவெதுப்பான நீரால் முகத்தை அலசிவிட்டு, தேனை முகத்தில் தடவி 2 முதல் 3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின்னர், முகத்தை கழுவி விடவும். வாரத்திற்கு 2 முதல் 3 முறையாவது இதனை செய்யவும்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும், ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் சந்தனப் பவுடர் ஆகியவற்றை ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதை செய்து வர முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
  • 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர், அரை டேபிள் ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு பேஸ்ட் பதத்தில் கலந்து முகத்தில் கை கொண்டோ அல்லது பிரஷ் கொண்டோ தடவவும். 15-20 நிமிடங்களுக்கு இதனை அப்படியே விட்டுவிட்டு, பின்பு கழுவிடலாம். பின் முகத்தை லேசாக துடைத்துவிட்டு, மாஸ்சரைசர் தடவவும்.
  • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவிடவும். இது முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து, சருமத்தை ஒளிரச் செய்திடும்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் பால், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலந்து, பஞ்சு கொண்டு முகத்தில் தடவவும். முகத்தில் தடவிய கலவை நன்கு காய்ந்ததும், தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிடவும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ளவும். அத்துடன் தேன் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் காய விடவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யவும்.

Sharing is caring!