சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட தயிர்

சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. 

உடல் நலத்தை நாம் எவ்வளவு ஆரோக்கியமாக வைத்திருக்கிறோமோ, அதே அளவுக்கு சருமத்தை பராமரிக்க வேண்டியதும் அவசியம். ஒவ்வொரு பருவகாலத்திலும் நமது சருமம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அதற்கேற்ப சரும பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதற்கு இயற்கை முறையிலேயே உங்களுக்கு தீர்வும் இருக்கிறது. உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கு தயிர் மட்டும் போதும். இதனை Facepack போல் பயன்படுத்தி நல்ல பலன்களை பெறுங்கள்.

புளித்த தயிர்

புளித்த தயிரை நீங்கள் முகத்தில் தடவிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். முகம் பொலிவு பெறுவது மட்டுமல்லாமல், சருமத்திற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்குவதற்கும், இறந்த செல்களை அகற்றுவதற்கும் தயிர் உதவுகிறது. இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தயிர் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் முகப்பருக்கள், தோல் சுருக்கங்கள் பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபடலாம்.

தயிர் மற்றும் வாழைப்பழம்:

தயிர், வாழைப்பழம், ரோஸ் வாட்டர் மூன்றும் கலந்து முகத்தில் தேய்த்தால் உங்களுக்கு உடனடி பலன் கிடைக்கும். இதனை ஒரு பேஸ்ட் போல் தயாரித்து முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளலாம். இதனை தினமும் செய்ய வேண்டியது அவசியம். அப்படி செய்தால் முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைப்பதை உங்களால் உணர முடியும். சருமம் மென்மையாக இருப்பதற்கும் இது பயன்படுகிறது.

தயிர் மற்றும் தேன்:

தயிர், தேன், எலுமிச்சை சாறு மூன்றும் உங்கள் உடல்நலத்திற்கும் நல்லது. அதே நேரத்தில் சரும பராமரிப்பிற்கும் சரியான தீர்வு இதுதான். மழைக்காலத்தில் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு இந்த கலவை பயன்படுகிறது. குறிப்பாக ஆயில் ஸ்கின் கொண்டவர்கள் இதனை கட்டாயம் முயற்சித்து பாருங்கள். இவை மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு தண்ணீர் வைத்து கழுவிக் கொள்ளுங்கள்.

தயிர் வைத்து ரெடியாகும் இந்த Facepack மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sharing is caring!