சரும தளர்ச்சியை போக்கும் இயற்கை முறை எளிமையான ஃபேஸ் பேக்!!!

சரும தளர்ச்சியை போக்க இயற்கை முறை… வயதாகும்போது ஏற்படும் மிக முக்கியமான அசௌகர்யம் சருமத்தளர்ச்சிதான். அதை இயற்கையாகத் தடுக்கவும், சருமத்தை இறுக்கமாக்கவும் எளிமையான ஃபேஸ் பேக்கை பார்க்கலாம்.

வயதாகும்போது ஏற்படும் மிக முக்கியமான அசௌகர்யம் சருமத்தளர்ச்சிதான். அதை இயற்கையாகத் தடுக்கவும், சருமத்தை இறுக்கமாக்கவும் எளிமையான ஃபேஸ் பேக்கை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: பாதாம் – 4, பாலில் ஊறவைத்த ஒட்ஸ் – 4 டீஸ்பூன், பாலில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ, கடலைமாவு – 2 டீஸ்பூன்,

செய்முறை: பாதாமை பவுடர் செய்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் அரைத்த பாதாம் பவுடரை போட்டு அதனுடன் பாலில் ஊறவைத்த ஓட்ஸ் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து கலந்துகொள்ளவும். இதனுடன் கடலைமாவு சேர்த்து குழைத்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஊறவைத்தால், ஃபேஸ் பேக் ரெடி!

இந்த ஃபேஸ் பேக்கை அப்ளை செய்வதற்கு முன், பால் வைத்து முகத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். முகத்தில் பால் தடவிவிட்டு, பஞ்சினால் துடைத்து எடுக்கவும். பாலிலுள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் ஆக்கும். பழைய மேக்கப்பின் மிச்சம் இருந்தாலும் நீங்கிவிடும். சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும். எனவே, வாய்ப்பிருப்பவர்கள், தினமும்கூட பால் உபயோகித்து முகத்தை கிளென்ஸ் செய்யலாம்.

ஃபேஸ் காஸ் (Gauze) எனப்படும் மெல்லிய துணியை முகத்தின் மேல் பொருத்திவிட்டு, தயாராக உள்ள ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் முழுக்க அப்ளை செய்யவும்.

சில நிமிடங்கள் கழித்து, ஃபேஸ் காஸை நீக்கினால் போதும். முகம் தளர்ச்சியின்றி, பளிச்சென மாறியிருக்கும். ஒரு வாரத்தில், அதிகபட்சமாக இரண்டு நாள்கள் இந்த ஃபேஸ் பேக்கை போட்டுக்கொள்ளலாம்.

பாதாம் மற்றும் ஓட்ஸில் உள்ள வைட்டமின் பி, புரதம் போன்றவை சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவும்.

Sharing is caring!