சின்ன உதட்டை பெரிதாக்க வேண்டுமா?

பொதுவாக எல்லா பெண்களுக்குமே உதடு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

இதற்காக வண்ண வண்ண நிறங்களில் உதடு சாயம் ( லிப்ஸ்டிக் ) போடுவது வழக்கம்.

அதிலும் சிலருக்கு உதடு எடுப்பாக இருக்க வேண்டும் எண்ணி உதட்டை செயற்கை முறையில் பெரிதாக்குவதுண்டு.

சிலர் ஒப்பனை அறுவை சிகிச்சை மூலமாகவும் பெரிய எடுப்பான உதட்டை பெற முயற்சிக்கின்றனர். ஆனால் இது தவறானது மற்றும் அவை நிரந்தரமானவை இல்லை.

இதனை தவிர்த்து சில எளிய சமையல் அறை பொருட்கள் மூலம் எடுப்பான பெரிய உதட்டை பெற முடியும். தற்போது அதனை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஒரு ஸ்பூன் உப்பு
  • ஒரு ஸ்பூன் வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி
  • பீட்ரூட் சாறு
  • லிப்ஸ்டிக் பிரஷ்
செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.

ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டையை இந்த கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் வாசலின் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை உங்கள் விரலால் உதட்டில் தடவவும்.லிப்ஸ்டிக் போல் உதடு முழுவதையும் மறைத்து தடவவும்.

பத்து நிமிடம் கழித்து இந்த கலவையை உங்கள் உதட்டில் இருந்து துடைத்து எடுக்கவும்.

உதட்டில் எதாவது ஒரு எரிச்சல் ஏற்படுவதை உணர்ந்தால், 5 நிமிடத்தில் இதனைத் துடைத்து விடவும்.பிறகு பீட்ரூட் சாற்றில் லிப்ஸ்டிக் பிரஷை நனைத்து , உங்கள் உதட்டில் சமமாக எல்லா இடத்திலும் தடவவும்.

மறுநாள், குளித்து முடித்தவுடன் உதட்டில் சிறிதளவு வாசலின் தடவி எப்போதும் போல் உங்கள் வேலையை கவனிக்கவும்.

ஒரு மாதம் வரை இந்த முறையை பின்பற்றவும். இதனால் சிறந்த விளைவுகளை நிச்சயம் உணரலாம்.

Sharing is caring!