சீக்கிரம் முகப்பருவை போக்கணுமா? அப்போ இதை செய்யுங்கோ

அழகான சருமம் வேண்டும் என்று எல்லாம் பெண்களும் ஆசைப்படுவாங்க. சருமத்தில் சின்ன பருவோ, கரும்புள்ளியோ வந்துவிட்டால் அதை எப்படி அகற்ற வேண்டும் என்று பல க்ரீம்மைகளை பயன்படுத்துவார்கள். இன்றைய மாசடைந்த சூழலில் சரும பாதுகாப்பு அவசியம்.

சரும பாதுகாப்பிற்காக பலர் அதிக அளவு செலவு செய்கிறார்கள். கணக்கில் கொள்ளாமல் அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி சருமத்தை பாதுகாக்கின்றனர். சில அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பலருக்கு பக்கவிளைவை கொடுத்து விடும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்கள் முகத்தை வசீகரமாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். கல்யாணம் நெருங்கும் பெண்களுக்கு முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையம் இருந்தால் கொஞ்சம் மனக்கஷ்டப்படுவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் கவலை படவே வேண்டாம். வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்தே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, அழகாகவும், மென்மையான சருமத்தை பெறலாம்.

இயற்கைக்கு மிஞ்சினது வேறு எதுவும் இல்லை. என்னதான் செயற்கையான ரசாயனப்பொருட்களை பயன்படுத்தினாலும் என்றைக்குமே இயற்கையான பொருட்கள் தான் ஆரோக்கியத்திற்கு உதவும். இயற்கை பொருட்களை கொண்டு முகத்தை அழகுப்படுத்தினால் பக்கவிளைவுகள் எதுவும் நம்மை அண்டாது.

எனவே, இயற்கை பொருட்களை பயன்படுத்தி எவ்வித பக்கவிளைவுமின்றி, சரும பாதிப்பை தடுக்கலாம்.

தேனை சருமத்திற்கு பயன்படுத்தலாம். தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் இருப்பதால் சருமத்திற்கு பல நன்மைகள் தருகின்றன. உடல் எடையையும் குறைக்கும்.

தேனை பயன்படுத்தி கரும்புள்ளிகளை எப்படி நீக்கலாம் என்று பார்ப்போம்:

  • வெதுவெதுப்பான நீரால் முகத்தை முதலில் நனைத்து தேனை முகத்தில் தடவி 3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்பு முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால் கரும்புள்ளிகள் நாளடைவில் நீங்கும்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும், ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் சந்தனப் பவுடர் ஆகியவற்றை ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து, இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவடையும்.
  • பத்து துளி எலுமிச்சை சாறுடன், கொஞ்சம் தேன், மஞ்சள், கடலைமாவு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள் நீங்கும்.
  • தேனை அப்படியே முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் ப்ளீச் செய்தது போல மின்னும்.

Sharing is caring!