சீன பெண்களை போல அழகில் மின்ன வேண்டுமா?

உலகில் சீன பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். வயதானவர்கள் கூட இளம் பெண்களை போலவே மின்னுவார்கள்.

தமிழ் பெண்களும் அழகியாக தினமும் ருசித்து ருசித்து சாப்பிடும் கடலை மட்டுமே போதும்.

கடலையில் ஏராளமான மகத்துவங்கள் உள்ளன. உடலுக்கு கடலை எந்த அளவிற்கு நல்லதோ, அதே அளவிற்கு இது முகத்திற்கு அழகை வாரி வழங்குகிறது.

கடலையை வைத்து முக அழகை பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் அறிந்து பயன் பெறுவோம்.

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, கருமையை போக்குவதற்கான எளிய வழி.

அதற்கு தேவையானவை…

  • பால் 2 ஸ்பூன்
  • கடலை 10
  • தேன் 1 ஸ்பூன்

செய்முறை

கடலையை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் பால் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போன்று செய்து கொள்ளவும்.

இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பான வெண்மையை பெறும்.

Sharing is caring!