செலவே இல்லாமல் 10 நிமிடத்தில் வெள்ளையாகனுமா?

பெரும்பாலானோர் விரும்பி குடிக்கும் காபி, உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக்க உதவும் என்பது அனைவருக்குமே தெரியும்.

ஆனால் அந்த காபி சருமத்திலும் மாயங்களை ஏற்படுத்தும்.

சொல்லப்போனால் காபி ஒரு அற்புதமான எக்ஸ்போலியேட்டர். இது சருமத்தில் இரத்த ஓட்டத்தைத் தூண்ட உதவி புரிந்து, முகப்பரு, செல்லுலைட் மற்றும் ஸ்ட்ரெட்ச் மார்க் போன்றவற்றைக் குறைக்கும்.

காபி ஃபேஸ் பேக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.

நீங்கள் சருமத்தில் அடிக்கடி பிரச்சனைகளை சந்திப்பவராயின், எந்த சரும பிரச்சனைக்கு எந்த மாதிரியான காபி ஃபேஸ் பேக் போடுவது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து முயற்சித்து, கொரோனா காலத்தில் உங்கள் அழகை வீட்டிலேயே மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

வெள்ளையாக…

தேவையான பொருட்கள்

  1. காபி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
  2. மஞ்சள் – 1 டேபிள் ஸ்பூன்
  3. தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • ஒரு பௌலில் காபி தூள், மஞ்சள் தூள் மற்றும் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதை கட்டி இல்லாதவாறு நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
  • பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இப்படி வாரத்திற்கு 2 முறை போட்டால், முகம் பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

Sharing is caring!