தலைமுடிக்கு பூசப்படும் வர்ண டையினால் பேராபத்து!

இன்று நவநாகரிகம் எனும் பெயரில் தலைக்கு வர்ணப் பூச்சுக்களை பூசுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இவ்வாறு பூசப்படும் வர்ண டையினால் மார்பகப்புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

National Institute of Environmental Health Sciences (NIEHS) நிறுவனம் மற்றும் வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இவ் ஆய்விற்காக 47,000 பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சகோதரிகள் ஆவர்.

இதன்போது கடும் வர்ணத்தினாலான டையினை பயன்படுத்துபவர்கள் மார்பகப்புற்றுநோய்க்கு உள்ளாவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

Sharing is caring!