தலைமுடியை சர சரனு நீளமாக வளரச் செய்யும் வல்லாரை கீரை!

யாருக்கு தான் முடி கொட்டுற பிரச்சினை இல்லை. முடி உதிர்வதால் மன உளைச்சல் ஒரு பக்கம், உடல் நல குறைபாடு ஒரு பக்கம், இப்படி எல்லா பக்கத்திலும் வேதனையே நமக்கு கிடைக்கிறது.

பல நிறுவனங்கள் இதை மிக பெரிய அளவில் ஒரு வியாபாரமாகவே மாற்றி விட்டனர். வழுக்கைக்கு ஒரு மருந்து, முடி உதிர்வுக்கு ஒரு மருந்து, வெள்ளை முடிக்கு ஒரு மருந்து என பல வித மருந்துகளை காட்டி மக்களை ஏமாற்றியும் வருகின்றனர்.

இப்படிப்பட்ட மோசமான பிரச்சினையில் இருந்து விடுபட வழியே இல்லையா என்று கேட்டால், அதற்கு நம் முன்னோர்களின் வழி உள்ளது என்பதே பதில்.

தலைமுடியை வளரச் செய்யும் வல்லாரை

ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகமாக பயன்படுத்தி வரும் தாவரம் தான் வல்லாரை.

இது கூந்தல் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுவதோடு மூளையில் உள்ள கெமிக்கல்களை தூண்டி மூளையை கூர்மையாக வைக்க உதவுகிறது. வல்லாரை வேர்க்கால்களை வலிமையாக்கி முடியை வலிமையாக்குகிறது.

எனவே இது முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. வல்லாரை பவுடரை நேச்சுரல் முடி வளர்ச்சி மருந்தாக கூட பயன்படுத்தி வரலாம். பலன் கிடைக்கும்.

எப்படி கலக்க வேண்டும்?

வல்லாரையை உலர்த்தி காய வைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் புல்லின் பச்சை வாசனை மாதிரி இருக்கும். வேண்டும் என்றால் இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளுங்கள்.

எப்படி தேய்க்க வேண்டும்?

மேலும் இந்த வல்லாரையுடன் நெல்லிக்காய், துளசி மற்றும் வேப்பிலை போன்றவற்றை கூட சேர்த்து கொள்ளலாம்.

இந்த பேஸ்ட்டை தலை மற்றும் கூந்தலில் தடவி 45-50 நிமிடங்கள் காய வையுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படியே தொடர்ந்து செய்தால் முடி அடர்த்தியாக வளர்வதை நீங்களே பார்க்க முடியும்.

Sharing is caring!