தலைமுடி கலரிங் செய்வதற்கு முன்பும், செய்த பின்பும் பின்பற்ற வேண்டியவை!!!

கலரிங் செய்த முடியை பராமரிக்கும் முறை… உங்கள் கலரிங் செய்த தலைமுடியை எப்படி பராமரிப்பது என்றும், சரியான ஷாம்பூவை தேர்வு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று ஆண், பெண் என்று இருபாலாரும் தலைமுடிக்கு பல வண்ணங்களில் சாயங்கள் பூசுகின்றனர். இதனால் பலருக்கும் தலைமுடிக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்கின்ற ஐயமும் உள்ளது. எனினும், சரியான பராமரிப்பு, உங்கள் தலைமுடியை நன்கு பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

உங்கள் தலைமுடிக்கு நீங்கள் சாயம் பூசி இருந்தால், கட்டாயம் அதற்கான பராமரிப்புகளை செய்ய வேண்டியது அவசியம். மேலும் குறிப்பாக சரியான ஷாம்பூவை தேர்வு செய்வதும் மிக முக்கியமான ஒன்றாகும். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு, தரமற்றதாக இருந்தால், விரைவாக முடி ஆரோக்கியம் இழந்து, வறண்டு, மேலும் சாயமும் மங்கி போகக் கூடும்.

அழகு நிலையத்திற்கு சென்றோ, ஒரு நிபுணரின் உதவியோடோ அல்லது வேத்திலேயோ, தலைமுடிக்கு சாயம் பூசி விட்டால், அதோடு உங்கள் வேலை முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதன் பின்னரே உங்களது உண்மையான வேலை தொடங்குகின்றது. உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசும் முன், நீங்கள் சில முக்கியமான விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே உங்களுக்காக அவை;

முதலில், தலைமுடிக்கு சாயம் பூசி விட்டால், உங்களால் அதனை பராமரிக்க முடியுமா என்று சிந்தியுங்கள் இன்று பல நவீன வண்ணங்கள் தலைமுடிக்கு கிடைகின்றது. அப்படி ஒன்றை நீங்கள் தேர்வு செய்யும் முன், அந்த வண்ணம் உங்கள் முக அழகிற்கும், தலைமுடிக்கும் ஏற்றதாக இருக்குமா என்று பாருங்கள்

அடர் நிறம் மற்றும் வெளிர் நிறம் என்று பல நிறங்கள் தலைமுடிக்கு சாயம் பூச இருந்தாலும், அது உங்களுக்கு ஒரு இயற்கையான அழகான தோற்றத்தை தருமா என்று பார்க்க வேண்டும்.

தலைமுடியின் ஒரு பகுதிக்கு மட்டும் சாயம் பூசப் போகின்றீர்களா அல்லது முழுவதுமாக ஒரே நிறத்தால் பூசப்போகின்றீர்களா என்று முடிவு செய்ய வேண்டும்

* நீங்கள் தேர்வு செய்யும் வண்ணம், உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களது இயற்கையான நிறத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்

நரை முடியை மட்டும் மறைக்க சாயம் பூசப்போகின்றீர்களா அல்லது அனைத்து முடிகளுக்கும் சாயம் பூசப்போகின்றீர்களா என்று முடிவு செய்ய வேண்டும். தலைமுடி சாயம் செய்ய தேவைப்படும் செலவுகளை பற்றி திட்டமிட வேண்டும். அது உங்கள் எதிர்பார்ப்புகளுக்குள் இருகின்றதா என்று பார்க்க வேண்டும்

எந்த தரத்தில் இருக்கும் சாயத்தை பயன்படுத்த போகின்றீர்கள் என்று முடிவு செய்ய வேண்டும். அதேபோல் முடிக்கு சாயம் செய்த பின்னர் அதை முறையாக பராமரிப்பது குறித்து உரிய ஆலோசகர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கலர் சாயம் செய்த முடிக்கு எந்த ஷாம்பு உபயோகப்படுத்த வே:ண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

Sharing is caring!