தலைமுடி வளர்ச்சிக்கு கேரட்…..

கேரட் சமையலுக்கு மட்டுமின்றி கூந்தல் பிரச்சினைகளை கூட தீர்வளிக்கின்றது.

பல்வேறு கூந்தல் பராமரிப்புப் பொருட்களில் கேரட் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டிலேயே கேரட் கொண்டு நமது கூந்தல் அழகைப் பராமரிக்க முடியும்.

அந்தவகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
  • கேரட் – 1
  • அவகேடோ – ½ பழம்
  • தேன் – 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:

மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

உங்கள் உச்சசந்தலையில் இந்த விழுதைத் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். உங்கள் உச்சந்தலையில் உள்ள எல்லா முடிகளிலும் இந்த விழுது இருக்கும்படி முழுவதுமாகத் தடவவும்.

அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும்.

பிறகு மென்மையான மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை இதனைப் பயன்படுத்தலாம்.

Sharing is caring!