தலையில் அரை மணி நேரம் இதை தடவி அலசுங்கள்! பின்னர் பாருங்க நடக்கும் அதிசயத்தை..!!

இந்த காலகட்டத்தில் உங்கள் முடிகளைப் பராமரிக்க நேரம் இல்லாததால் ஏதோ ஒரு ஷாம்பூ மற்றும் ஏதோ கண்டிஷனர் பயன்படுத்தி முடி கொடுக்கிறது என்ற கவலை பலருக்கும் உள்ளது.

முடி கொட்டுதல் சற்று எரிச்சலான விஷயம் தான். எத்தனையோ ஷாம்பூகளை நீங்கள் மாற்றி இருப்பீர்கள் ஆனால் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது .

அப்போது ஷாம்பூக்களுக்கு பதிலாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேத முறையில் ஒன்றை பயன்படுத்தி நல்ல மாற்றத்தினை பெற்று கொள்ளுங்கள்.

வெந்தயம்
  • வறுத்த வெந்தய தூள் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அத்துடன் நெல்லிக்காய் தூள் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வையுங்கள்.
  • அடுத்தநாள் காலையில் எழுந்து அந்த கலவையை எடுத்து தலையில் தடவி அரை மணி நேரம் உலர விட்டு பின்பு அலசுங்கள். இதனை நீங்கள் வரம் ஒரு முறை செய்யலாம்.
வேப்பிலை
  • வேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உள்ளது. இது உங்கள் தலையில் கொப்புளங்கள் இருந்தால் அதனை எதிர்த்துப் போராடும்.
  • இது கொப்புளங்களுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல் பொடுகினையும் நீக்குகிறது. ஒரு கை முழுவதுமாக வேப்பிலை இலைகளை எடுத்து ஒரு நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வையுங்கள்.
  • அடுத்தநாள் காலையில் அந்த இலைகளை எடுத்து அரைத்து அத்துடன் நான்கு தேக்கரண்டியளவு நெல்லிக்காய் தூள் சேர்த்துக் கலக்கி உச்சந்தலை மற்றும் முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.
செம்பருத்தி
  • செம்பருத்தியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்கள் முடி உதிர்தலுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க உதவும்.
  • செம்பருத்தி உங்கள் முடி வளர்ச்சியை அதிகரித்தல், விரைவில் நரை முடி வராமல் பாதுகாத்தல், மற்றும் பூச்சி வெட்டுகள் போன்ற முடி சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க உதவும்.
  • மூன்று தேக்கரண்டியளவு செம்பருத்தி பவுடர், 1/4 கப் தயிர், இரண்டு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் கலந்து கலவையாகக் கலக்கிக் கொள்ளுங்கள்.
  • இந்த கலவையை நன்றாகக் கலந்து முடியில் 20 நிமிடங்கள் வைத்து அலசுங்கள். மேலும் இதை வாரத்தில் ஒரு நாள் செய்யுங்கள். இதில் உங்களுக்கு ஏற்ற முறையைச் செய்து உங்கள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தி அடர்த்தியான முடியைப் பெற்று மகிழுங்கள்.

Sharing is caring!