தூங்கி எழும்போது அழகியாக மாற வேண்டுமா?

பல பெண்களின் கனவு ஒரே இரவில் மிகவும் அழகானவர்களாக மாற வேண்டும் என்பதே. அழகு என்பது முகம் மட்டும் சார்ந்த விஷயம் கிடையாது.

உடல் ஆரோக்கியத்தையும் உள்ளத்தின் ஆரோக்கியத்தையும் சார்ந்தே முகத்தின் அழகு நிர்ணயிக்கப்படும்.

பெண்களுக்கு அழகு என்பது ஒரு டேக் லைன் போல இன்று மாறி கொண்டே வருகிறது. சீன பெண்கள் அழகில் ஜொலிக்க இதனை தான் பயன்படுத்துகின்றனர். தமிழ் பெண்களும் அதனை முயற்சி செய்து பாருங்கள்.

இவற்றிற்கு ஒரு அருமையான தீர்வு வாழைப்பழமே. இதில் உள்ள எண்ணற்ற நன்மைகள் உங்கள் முக அழகை பல மடங்கு அதிகரிக்கும்.

இனி வாழை பழத்தை வைத்து தயார் செய்யும் அழகு குறிப்பை பற்றி பார்ப்போம்.

பொலிவான முகம் பெற
  • முதலில் பழுத்த அரை வாழை பழத்தை எடுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பிறகு அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்கவும்.
  • இதனை முகத்தில் நன்றாக பூசி 15 நிமிடம் மசாஜ் செய்யவும். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
  • இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் முகம் மிகவும் அழகாகவும் பொலிவாகவும் மாறும்.

Sharing is caring!