நரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா?..

இயற்கையாக அல்லது பாரம்பரியமாக உங்கள் தலைமுடியின் இயற்கை நிறம் இழக்கப்பட்டால் அதனை மீட்டெடுப்பது மிகவும் கடினம். ஆனால் நரை முடி அதிகரிக்காமல் குறைவதற்கு உங்கள் உணவு ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

உங்கள் தலைமுடியின் இயற்கை நிறத்திற்கு காரணம் மெலனின். பொதுவாக 30 வயதிற்கு மேல் உடலில் மெலனின் இழப்பு இயற்கையாக உண்டாகிறது.

உங்கள் தலைமுடி நிறம் இழப்பதற்கான விகிதம் உங்கள் மரபணுவில் மறைக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் பெற்றோருக்கு இளம் வயதில் நரைமுடி தோன்றியிருந்தால் உங்களுக்கும் இளம் வயதில் நரைமுடி தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

பலரும் சொல்வது போல், நரைமுடியை மாற்றி மீண்டும் கருமையாக செய்வது நடக்க முடியாத காரியம். உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் சொந்தமாக மெலனினை உற்பத்தி செய்ய முடியாது.

இயற்கையாக உண்டாகும் நரை முடியை தவிர்த்து, நரை முடி உண்டாக வேறு சில காரணங்கள் உண்டு. அந்த கரணங்கள் குறித்து இப்போது அறிந்து கொள்வோம். இவற்றை களைவதால் நரைமுடி பாதிப்பை போக்க முடியும்.

உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒரு சமச்சீர் உணவு தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துகளை உங்கள் தலைமுடி இழக்கும் போது நரைமுடி தோன்றலாம்.

வைட்டமின் பி 12, போலேட், காப்பர், இரும்பு போன்ற சத்துகள் குறையும் போது இவை உண்டாகிறது. இந்த வகை வைட்டமின்களை அதிகரிக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் காலப்போக்கில் உங்கள் தலைமுடி அதன் இயற்கை நிறத்தை மீட்டெடுக்கும். ஆனால் இந்த மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

சில குறிப்பிட்ட ஆரோக்கிய பாதிப்புகள் காரணமாகவும் இளம் வயதில் நரை முடி உண்டாகலாம். தைராய்டு, அலோபீசியா அரேட்டா போன்றவை இதில் அடங்கும்.

ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாகவும் தலை முடியின் இயற்கை நிறம் இழக்கப்படலாம். இந்த நிலைகளை நிர்வகிக்கவும் தலைமுடியின் இயற்கை நிறத்தை மீட்டெடுக்கவும் முடியும்.

தடுக்கும் வழிமுறைகள்:

* மனஅழுத்த ஹார்மோன்கள் மெலனின் உற்பத்தியை தாமதப்படுத்தலாம் என்பதால் மனஅழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்.

* உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* சூரிய ஒளியில் உங்கள் தலைமுடி வெளிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இயற்கையாக உண்டாகும் நரைமுடியை கருமையாக்க முடியாது. ஆனால் இன்டர்நெட்டில் பலரும் கூறும் ஒரு பொய் என்னவென்றால் இவற்றை எளிதாக சரிசெய்ய முடியும் என்பது தான். பொதுவாக நரைமுடி குறித்து கூறப்படும் கட்டுக்கதைகள் அனைத்தையும் நம்பி ஏமாறதீர்கள்…

Sharing is caring!