நறுமணத்துடன் மேனி பளபளக்க சம்மர் ஸ்பெஷல் குளியல் பொடி!

அடிக்கும் வெயிலை பார்த்து அஞ்சாதவர்களே இருக்க முடியாது. இந்த நேரத்தில் தினமும் ஒரு வேளை அல்ல இரு வேளையும் குளித்தால் தான் வியர்வை அடங்கும். ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை நினைத்தால் இரு முறை குளியல் நடைமுறை சாத்தியமற்றதே.

இந்த சூழலில், வியர்வையும் அடங்க வேண்டும். துர்நாற்றமும் வரக்கூடாது. அதே சமயம், கமகம வாசனையுடன் மேனியும் பளபளக்க வேண்டும் என்றால், அதற்கு சாதாரண சோப்புகளை பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் குளியல் பொடிகளை பயன்படுத்துவது நன்று.

பூக்கடைகளில் கிடைக்கும் ரோஜா இதழ்களை காயவைத்து அரைத்து, அத்துடன், சிறிதளவு வெட்டி வேர், கஸ்துாரி மஞ்சள் மற்றும் கடலை மாவு சேர்த்த கலவையை குளியலுக்கு பயன்படுத்தினால், சரும பாதுகாப்பு மட்டுமின்றி, பளபளக்கும் மேனியுடன் நறுமணத்தையும் பெறலாம்.

வெட்டி வேர் வாசனைக்கு மட்டுமின்றி சிறந்த கிருமி எதிர்ப்பு சக்தியாகவும் பயன்படுகிறது. கஸ்துாரி மஞ்சள் சிறந்த ஆன்ட்டி பயாடிக்காவும், ரோஜா இதழ் மேனியை மிருதுவாக்குவதுடன் பளபளப்பை கூட்டித் தருகிறது. கடலை மாவு வழக்கம் போல் ஸ்கின் சாப்ட்னசுக்கு பயன்படுகிறது.

சிலர் கடலை மாவுக்கு பதில், பயத்தை மாவையும் பயன்படுத்துவர். அது உபயோகிப்பவரின் விருப்பத்தை பொருத்தது.வசதியிருப்பின் சிறிதளவு பாதாம் சேர்த்தால் இன்னும் மிருது தன்மை கூட்டிக் கொடுக்கும். இவை அனைத்தும் ஹோம் மேட் என்பதால், எவ்வித ரசாயன கலவையும் இதில் இருப்பதில்லை. எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் இதை அச்சமின்றி பயன்படுத்தலாம்.

Sharing is caring!