நீங்கள் இளமையா இருக்கத் தினமும் இதைச் சாப்பிட்டாலே போதும்..!

நாம் காலையில் சாப்பிட கூடிய உணவு உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்த கூடும்.தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்யமாக இருப்பதோடு உங்களை நீண்ட காலம் இளமையாக வைத்துக்கொள்ளும்.நீண்ட காலம் இளமையாக இருக்கக் காலையில் இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்..

பப்பாளி

காலை உணவுடன் பப்பாளியை சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு சருமமும் பொலிவடையும்.உடலில் இருக்கும் அழுகை நீக்குவது பப்பாளியின் முக்கியச் சிறப்பு இப்படிச் செய்யும் போது சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கி சருமம் புத்துணர்வு பெரும்.பப்பாளியுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.

உடலுக்குத் தேவையான கால்சியம்,வைட்டமின் என எண்ணற்ற நர்குணங்கள் Acai Berries-ல் உள்ளது.தினமும் இதை உணவுடன் சேர்த்துக்கொண்டால் உடலில் இருக்கும் செல்கள் பொலிவிழக்காது.இதனால் சருமம் நீண்ட காலமாக இளமையாக இருக்கும்.
சியா விதைகள்

சியா விதைகளின் நர்குணங்களை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.இதில் நிறைந்திருக்கும் Omega 3 அமிலம் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கச் செய்யும்.
முட்டை

எளிமையாகக் கிடைக்கும் உணவு முட்டை,இதை தினமும் காலை உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஆரோக்யத்தைச் சீராக வைப்பதோடு உடல் பருமன் மற்றும் சருமபிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
கிரீன் டீ

காலையில் எழுந்தவுடன் அனைவருக்குமே டீ குடிக்கும் பழக்கம் இருக்கும்.வெறும் டீ குடிப்பதற்குப் பதிலாகக் கிரீன் டீ குடிக்கத் தொடங்கினாள் உடல் ஆரோக்யமாக இருப்பதோடு சருமம் இளமையாக இருக்கும் எனப் பல ஆய்வுகள் கூறுகிறது.

Sharing is caring!