நெற்றிச் சுருக்கத்தை போக்கு எளிய முறையில் போக்க இதோ சில டிப்ஸ்!

நம்மில் நிறைய பேருக்கு நெற்றியில் வரிகள் போல சுருக்கங்கள் ஏற்படும். இதற்கு வயதாவது ஒரு காரணம். அதை தவிர்த்து இளம் வயதிலேயே சிலருக்கு சுருக்கங்கள் வளரும்.

மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி நெற்றியை சுருக்குவதால் இது போன்று கோடுகள் உருவாகும். பின்னர் அது அப்படியே நிலைத்திடும்.

இந்த சுருக்கத்தை வீட்டிலேயே எளிய முறையில் போக்கிவிடலாம். தற்போது நெற்றியில் விழும் சுருக்கங்கள் மறைய எளிய வழிகள் சிலவற்றை பார்ப்போம்.

  • ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் பாதாம் விழுது, ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறு, அரை டீஸ்பூன் கோதுமை எண்ணெய் போன்றவைகளை சேர்க்கவும். அதனை நன்றாக கலந்து நெற்றியில் பூசி, அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம்.
  • ஒரு வாழைப் பழத்தை நன்றாக பிசைந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி சேர்க்கவும். பின்பு இரண்டு டீஸ்பூன் பால், 5 துளிகள் தேன் கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை நெற்றியில் தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.
  • எண்ணெய் மசாஜ் செய்வதும் நெற்றியில் உள்ள சுருக்கங்களை போக்க உதவும். ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய், அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 4 சொட்டு கோதுமை எண்ணெய் ஆகியவற்றை கலந்து நெற்றியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் நன்றாக உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்துவிட்டு தூங்க செல்லலாம்
  • உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதும் சுருக்கத்தை தடுக்க உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும்.

Sharing is caring!