பிரசவத்திற்கு பிறகும் அழகை எப்படி பராமரிப்பது?

பொதுவாக பிரசவத்திற்கு பிறகு பல பெண்களுக்கு தங்களது அழகு குறைந்து விடுமோ என்ற பயம் காணப்படுவதுண்டு.

ஏனெனில் கர்ப்பக்காலத்தில் உடல் ஹார்மோன்கள் மாற்றத்தால் உடலிலும் மனதிலும் உண்டாகும் மாற்றங்கள் சருமத்திலும், கூந்தலிலும் கூட பிரதிபலிக்கும்.

இதனால் முடி உதிர்வு, கருவளையங்கள், வயிற்றில் தழும்புகள் போன்றவை ஏற்படுகின்றது.

இதனை தடுக்க மருத்துவரின் ஆலோசனையின்றி கண்ட கண்ட கிறீம்களை வாங்கி போடுவதை தவிர்த்து விட்டு இயற்கை முறைகள் கிடைக்கும் பொருட்களை சிலவற்றை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • பிரசவத்திற்கு பின் பெண்கள் தங்கள் முகப்பொலிவை இழக்க நேரிடும். கவலை வேண்டாம். முகப்பொலிவை தக்கவைத்து கொள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த பெர்ரி, பிளம்ஸ், ஆரஞ்சு, திராட்சை, டார்க் சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுங்கள்.
  • பிரசவத்தின் பொது நிறைய திரவங்கள் உடலில் இருந்து வெளியேறிவிடும். அதை மீட்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகளையும் சேர்த்து கொள்ளலாம்.
  • பிரசவத்திற்கு பின் வயிற்றில் சுருக்கங்கள் ஏற்படும். இதனை போக்க தினமும் வயிற்றில் ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவி 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மேலும் குளித்த பிறகு தரமான மாய்ஸ்சரைசரை வயிற்றில் தடவுங்கள்.
  • பிரசவத்திற்கு பின் முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது வெள்ளை அல்லது கருந்திட்டுகள் உருவாகும். இதனை போக்க வீடு வைத்தியங்களான புதிதாய் நறுக்கிய பூண்டை அந்த இடங்களில் பூசுவது, முகத்தை பன்னீர் கொண்டு அவ்வப்போது துடைப்பது ஆகியவையும் அடங்கும்.
  • குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் தூக்கம் அறவே குறைந்து விடும். இதனால் கண்கள் வீங்கி கருவளையங்கள் உருவாகும். இதனை போக்க தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை 15-20 நிமிடங்கள் வரை கண்களில் வைத்து எடுங்கள். மேலும் டீ பைகளை குளிந்த நீரில் நனைத்து கண்களில் வைத்து ஒற்றி எடுத்தால் கண் வீக்கம் குறையும்.
  • பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் சந்திக்கும் மற்றோர் பிரச்சினை முடி உதிர்வு. இதனை தடுக்க தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக தலையில் தேங்காய் எண்ணெய் தடவி பின் குளியுங்கள். இதனால் முடி வறட்சியடைந்து உதிர்வது தவிர்க்கப்படும்.
  • பிரசவத்திற்கு பின் சருமம் மற்றும் உதடுகள் வறண்டு, நகங்கள் உடையக்கூடியதாய் இருக்கும். இதற்கு காரணம் போதிய சத்துக்கள் இல்லாமையே. இதை சரி செய்ய தினமும் போதிய மாய்ஸ்சரைசர் தடவுங்கள். Cocoa பட்டர் நிறைந்துள்ள கிரீம்களை பயன்படுத்துங்கள்.

Sharing is caring!