புருவங்களின் அடர்த்தியை அதிகரிக்க இந்த பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்

பொதுவாக சில பெண்களுக்கு புருவங்கள் மிகவும் சிறியதாகவும் அடர்த்தி குறைந்தும் காணப்படும்.

இதற்காக சிலர் கண் மைகளைப் பயன்படுத்தி, புருவங்களை வரைந்து கொள்வார்கள்.

இதற்கு புருவங்களின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியை அதிகரிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகளை உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • விரல் நுனியில் விளக்கெண்ணெய் தடவி புருவங்களின் மீது நெற்றியிலிருந்து கன்னம் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு புருவத்திலும் ஐந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பிறகு புருவத்தை ஒரு மணி நேரமாவது ஊறவைக்கவும். தொடர்ந்து 30 நாட்கள் வரை தடவினால் பலன் கிடைக்கும். இடையில் புருவமுடி திருத்தம் செய்ய வேண்டாம். இரவு நேரங்களில் மசாஜ் செய்து கொள்ளலாம்.
  • விரல்களில் ​ஜோஜோபா எண்ணெய் நிறைவாக எடுத்து புருவங்களில் தடவி மசாஜ் செய்து வந்தாலே போதுமானது. இரவு நேரங்களிலும் செய்யலாம்.
  • ஆலிவ் எண்ணெயை இலேசாக சூடு செய்து புருவங்களில் தடவி மசாஜ் செய்யலாம். தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு இதை செய்துவரலாம். கூடுதலாக புருவங்களில் பொலிவும் கிடைக்கும்.
  • தினமும் ஒரு ​வைட்டமின் இ மாத்திரையை எடுத்து புருவங்களில் தடவி வர வேண்டும். மறுநாள் காலை வழக்கம் போல் முகத்தை கழுவினாலே போதுமானது. தொடர்ந்து செய்துவந்தால் முடி வேகமாக வளரும் அடர்த்தியாகவும் இருக்கும்.
  • தேங்காயெண்ணெயில் இருக்கும் லாரிக் அமிலம், ஆன்டி- மைக்ரோபியல் தன்மை கொண்டிருப்பதால் புருவத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கும். எனவே இந்த எண்ணெய் மசாஜ் செய்யும் காலத்தில் புருவ முடியில் அதிக மேக் அப் தவிர்க்க வேண்டும். புருவ முடியை சீவி விடவேண்டும். இதனால் ரத்த ஓட்டம் கிடைக்கும். ஓய்வாக இருக்கும் நேரத்தில் புருவத்தை மசாஜ் செய்யலாம்.

Sharing is caring!