புருவம் அழகு பெற வேண்டுமா?

புருவங்கள் தான் நம் கண்களை சூரியன், தூசி, வியர்வை ஆகியவற்றில் இருந்து காத்து, பார்வையை மங்கவிடாமல் பார்த்துக்கொள்கின்றது.

பொதுவாக முகத்திற்கு கண்கள் அழகு சேர்ப்பதை போல புருவங்களும் அதில் பெரிய பங்கு வகிக்கின்றது.

ஆனால் சிலருக்கு புருங்கள் அடத்தியாக இருக்காது. இதற்காக விளம்பரங்களில் காட்டப்படும் கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி பூசுவதை தவிர்த்து இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது புருவங்களை எப்படி இயற்கையாக வளர்க்க முடியும் என்பதை பார்ப்போம்.

  • விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதை ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால், புருவம் புதுப்பொலிவு பெறும்.
  • தேங்காய் எண்ணெயை தூங்குவதற்கு முன்னர் புருவத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, காலையில் கழுவிவிடவும். இது முடியின் புரோட்டீன் இழப்பை தடுக்கும். இதிலிருக்கும் லாரிக் அமிலம், புருவ முடி வேர்களை நுண்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து, முடி வளர உதவும்.
  • தூங்குவதற்கு முன்னர் பாதாம் எண்ணெயை புருவத்தில் தேய்த்துவிட்டு காலையில் கழுவவும். இதிலிருக்கும் வைட்டமின் ஏ, பி, இ ஆகியவை முடி வளர உதவும்.
  • ஆலிவ் எண்ணெயை விரலால் புருவங்களில் தடவி, மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு வாரங்களுக்கு இதை செய்து வந்தால் முடி வளரும்.
  • புருவத்தில் கற்றாழை ஜெல் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது, விரைவில் முடி வளர உதவும்.
  • ஒரு வெங்காயத்தை சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, மூன்று டீஸ்பூன் தண்ணீர் கலந்து புருவத்தில் தேய்த்து வந்தால், முடி வளரும். வாரம் மூன்று முறை இதை செய்யலாம். இதிலிருக்கும் சல்பர், முடி உதிர்வை தடுக்கும்.
  • பாலை பஞ்சால் தொட்டு புருவத்தில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். ஆறு மாதங்களுக்கு இதை தொடர்ந்து செய்து வர, புருவ முடி சீராக வளரும்.
  • முட்டை மஞ்சள் கருவை புருவங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதை செய்யலாம். இதிலிருக்கும் பயோட்டின், முடி வளர உதவும்.

Sharing is caring!