பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்!

தலை முடி உதிர்வுக்கு பல மருத்துவ பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால், பாரிய அளவில் மாற்றத்தினை உணர்ந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

தமிழர்களின் உணவுகளில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய பொருளான பூண்டினை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.நல்ல ஒரு மாற்றத்தினை உணர முடியும்.

பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது.

பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய்
  • கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது.
  • பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது.
  • இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும்.

அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். நல்ல ஒரு மாற்றத்திரனை உங்களினால் உணர முடியும்.

Sharing is caring!