பைசா செலவில்லாம உடனே வெள்ளையாகணுமா?… அப்போ இங்கே ஓடி வாங்க…

எல்லாருக்கும் வெள்ளையாக நிறமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனால் நிறைய பியூட்டி முறைகளை நாடிச் செல்வார்கள்

ஆனால் இந்த முறைகள் எல்லாம் உங்களுக்கு பலனை தர நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். மேலும் அதிக செலவுகள், பக்கவிளைவுகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆனால் நாங்கள் கூறும் 5 வழிகளை பின்பற்றினாலே போதும் உடனடியாக வீட்டில் இருந்த படியே நல்ல நிறத்தை நீங்கள் பெற இயலும்.

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ் நமது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கு நல்ல நிறம் கொடுக்கவும் உதவுகிறது. இது இயற்கையாகவே ப்ளீச்சிங் ஏஜெண்ட் மாதிரி செயல்படுவதால் சரும மேல் அடுக்குகளை பதிப்பித்து நல்ல நிறமேற்றுகிறது.

பயன்படுத்தும் முறை

சுத்தமான லெமன் ஜூஸ் சருமத்தை பாதிப்படையச் செய்யும். எனவே இதனுடன் ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து அதில் காட்டன் பஞ்சை நனைத்து முகத்தில் அப்ளே செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 2-3 தடவை செய்து வரவும். சூரிய ஒளியில் செல்வதற்கு முன்பு இதை முழுவதுமாக கழுவி விட்டு செல்லவும்.

தக்காளி

தக்காளி உங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள கருமை, இறந்த செல்கள் போன்றவற்றை நீக்கி முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது.

பயன்படுத்தும் முறை

1-2 தக்காளி சாற்றை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கொஞ்சம் தேவைப்பட்டால் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். தினமும் இதை குளிப்பதற்கு முன் போட்டு வந்தால் நல்ல சிவப்பான நிறத்தை பெறுவீர்கள்.

பால் மற்றும் லெமன்

பாலில் உள்ள என்சைம்கள் சருமத்திற்கு நிறத்தை தருகிறது. மேலும் இதில் மாய்ஸ்சரைசர் பொருட்கள் இருப்பதால் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. லெமன் ஒரு ப்ளீச்சிங் ஏஜெண்ட் மாதிரி செயல்பட்டு அதிலுள்ள அஸ்ட்ரிஜெண்ட் பொருட்கள் சருமம் வறண்டு போவதை தடுக்கிறது.

பயன்படுத்தும் முறை

சூடான நீரில் குளிக்கும் போது அதில் ஒரு கப் பால் சேர்த்து குளிக்கலாம். அப்புறம் அதில் லெமன் ஜூஸ் பிழிந்து கலந்து கொள்ளுங்கள். இதை 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

புதுப்பித்தல்

இறந்த செல்களை நீக்கும் போதும் நமக்கு நல்ல சரும நிறம் கிடைக்கும். எனவே உப்பு சர்க்கரை சேர்த்த ஸ்க்ரப்பை பயன்படுத்தி இறந்த செல்களை நீக்கலாம். அப்படி இல்லையென்றால் நொறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் ஓட்ஸ் சேர்த்து பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

இந்த ஸ்க்ரப்களை ஈரமான சருமத்தில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு தடவை செய்து வந்தால் உங்கள் சருமம் பாலிஷ் செய்தது போன்று பளபளக்கும்.

மாய்ஸ்சரைசர்

இறந்த செல்கள் உங்கள் சருமத்தில் தங்கி விட தங்கி விட சருமம் ஈரப்பதத்தை இழந்து வறண்டு போய்விடும். எனவே உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் மிகவும் முக்கியம். எனவே மாய்ஸ்சரைசர் க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அப்படி இல்லையென்றால் இயற்கை முறையில் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை குளித்த பிறகு தடவி பயனடையலாம். 10 நிமிடங்களில் எண்ணெய் சருமத்தால் ஊறிஞ்சப்பட்டு நாள் முழுவதும் உங்கள் சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கும். அப்போ இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க, இந்த முறைகள் மூலம் நீங்களும் இனி சிவப்பாக மாறுங்கள்.

Sharing is caring!