மருதாணி இலைகள் கிடைக்க வில்லையா? மருதாணி இல்லாமலே 2 நிமிடங்களில் கை சிவக்கும்…! எப்படி தெரியுமா?

மருதாணி என்பது குழந்தைகளுக்கும் ,பெண்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த காலகட்டத்தில் மருதாணி இலைகள் கிடைப்பது மிகவும் சிரமமாகவே உள்ளது.

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் பொதுவாக மருதாணி இலைகளை அரைத்து மருதாணி போட்டுக்கொள்ள மாட்டார்கள். இந்த பிரச்சனை உள்ளவர்களும் எந்தவித தயக்கமும் இல்லாமல்

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிய முறையில் நம் கைகளை மருதாணி போட்டதை போல அழகு படுத்திக் கொள்ளலாம். இந்த தகவல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
  1. டீ தூள் – 3 தேக்கரண்டி
  2. வெள்ளம் – 2 தேக்கரண்டி
  3. சர்க்கரை – 1 தேக்கரண்டி
  4. அகல் விளக்கு – 1
  5. குங்குமம் – 1 தேக்கரண்டி
செய்முறை

முதலில் டீ தூள் ,வெள்ளம் ,சர்க்கரை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் கைக்கொண்டு கலந்து கொள்ளுங்கள்.பின் வேறொரு பாத்திரத்தின் நடுவில் அகல் விளக்கை வைத்து அதனை சுற்றி நாம் கலந்து வைத்த கலவையை போடுங்கள்.

அந்த அகல் விளக்கின் மேல் ஒரு சிறிய காலியான கப் வைத்து அடுப்பை பற்றவையுங்கள்.பின் இந்த பாத்திரத்தின் மேல் வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வையுங்கள்.இதை 7 -ல் இருந்து 10 நிமிடம் அடுப்பில் விட்டு அதன்பின் அடுப்பை அணைத்திடுங்கள்.

பாத்திரத்தின் சூடு தனிந்ததும் திறந்து பார்த்தால் நாம் காலியாக வைத்த கப்பில் ஒரு திரவம் வெளிவந்திருப்பதை காணலாம்.

பின் அந்த திரவத்தில் 1 தேக்கரண்டி குங்குமம் கலந்து பட்ஸ் பயன்படுத்தி கையில் மருதாணி போடுவதை போன்று போட்டுக்கொண்டு 1 மணிநேரம் கழித்து கை கழுவினால் அழகான சிவந்த மருதாணி உங்கள் கையில் இருப்பதை பார்க்கலாம்.

Sharing is caring!