முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியால் மிகவும் அவதியா?

பல பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான அழகு சம்பந்தப்பட்ட பிரச்னை கை, கால், முகத்தில் அசிங்கமாக முடி இருப்பது.

பெண்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் முடி வளர்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முறையற்ற மாதவிடாய் சுழற்சி, குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இதனை அகற்ற என்னத்தான் செயற்கை வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையே சிறந்தது.

அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டை முகத்தில் உள்ள முடிகளை அகற்ற சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.

அந்தவகையில் முட்டையை கொண்டு முகத்தில் இருக்கும் முடிகளை எப்படி போக்கலாம் என பார்ப்போம்.

  • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
  • முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
  • பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
  • தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.
  • மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
  • பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
  • ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

Sharing is caring!