முகத்தில் எண்ணெய் பசையை போக்க வேண்டுமா ?

சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இப்படி முகத்தில் எண்ணெய் அதிகம் வழிபவர்களுக்கு, முகப்பரு அதிகமாக வர வாய்ப்பு உள்ளது.

எனவே எண்ணெய் பசை சருமத்தினர், தங்களது சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையின் அளவைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

சருமத்தில் எண்ணெய் பசையின் அளவைக் கட்டுப்படுத்த கிளின்சிங், ஸ்கரப்பிங் போன்றவைகள் உதவி செய்யும்.

இப்படி செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் போன்றவை முழுமையாக நீங்கும். பருக்கள் வருவது குறையும்.

  • நாட்டுச் சர்க்கரை , ஓட்ஸ் பவுடர், ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை சாறு இவற்றையெல்லாம் சிறிதளவு எடுத்து கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வர எண்ணெய் பசை நீங்கும், இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். இறந்த செல்களின் தேக்கத்தைக் குறைத்து, பருக்கள் வருவதைத் தடுக்கும்.
  • முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக தெரியும்.
  • தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கும்.
  • முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறைந்து விடும்.
  • காலை எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வந்தால் எண்ணெய் பசை விலகும்.

Sharing is caring!