முகத்தில் வரும் அனைத்து பிரச்சினைகயும் சரி செய்ய வேண்டுமா?

பொதுவாக அனைவரது முகத்திலுமே பருக்கள், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், தழும்புகள் போன்றவை காணப்படுவது வழக்கம்.

இதனை போக்க பல பெண்கள் கிறீம்கள், வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தற்காலிகமாக இதனை மறைக்க முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள்.

இருப்பினும் இதனை எளிய முறையில் நெய் உதவிபுரிகின்றது.ஏனெனில் நெய்யில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலம். அதனால் இது சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்குமே ஈரப்பதம் வழங்கி நீரேற்றத்தை அதிகரிக்க செய்யும்.

அந்தவகையில் இப்போது நெய்யை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

  • இரவு தூங்கும் போது லிப்ஸ்டிக் பயன்படுத்தி இருந்தால் அதை அப்புறப்பத்தி உதட்டை சுத்தமாக துடைத்து நெய்யை விரல்கலள் தொட்டு உதடுகளில் இலேசாக மசாஜ் செய்தபடி விடவும் மறுநாள் காலையில் எழுந்தால் உதடு பளீரென்று பொலிவாக மென்மையாக இருக்கும்.
  • சில துளிகள் நெய்யை எடுத்து சருமம் முழுக்க தடவி இலேசாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் வரை முகத்தை அப்படியே விடவும். பிறகு மந்தமான நீரில் முகத்தை கழுவினால் முகம் மென்மையாக கூடும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் வரை இதை செய்ய வேண்டும். பிறகு படிப்படியாக வாரம் மூன்று முறை, வாரம் இரண்டு முறை, வாரம் ஒரு முறை செய்துவந்தால் வறட்சி முற்றிலும் நீங்கும்.
  • இரவு தூங்கும் போது முகத்தை சுத்தம் செய்து நெய் தடவி மசாஜ் செய்து விட்டு விடவும். அல்லது பகல் நேரத்தில் நெய் உடன் சந்தனம் கலந்து குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி முகத்துக்கு தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பளிச் என்று இருக்கும். பருக்கள் வருவது குறையும்.
  • சிறிய தட்டில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு இரண்டு விரல்களால் தொட்டு கண்களுக்கு கீழ் கருவளையம் அருகில் இதமாக மசாஜ் செய்ய வேண்டும். இரவு நேரமாக இருந்தால் மசாஜ் செய்து தூங்கிவிடலாம்.. பிறகு மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவினால் போதும். ஒருவாரம் வரை தொடர்ந்து செய்தால் கருவளையம் மறைவதை காணலாம்.
  • நெய்யுடன் சம அளவு தண்ணீர் கலந்து ஐந்து நிமிடங்கள் ஊறவிடவேண்டும். பிறகு தண்ணீரை மட்டும் வெளியே எடுக்க வேண்டும். இதே போன்று 20 முறையாவது தண்ணீர் சேர்த்து சேர்த்து ஐந்துநிமிடங்கள் கழித்து வெளியேற வெண்டும். முகத்தில் இருக்கும் வடுக்கள், காயங்கள், கரும்புள்ளிகள், கட்டிகள், ஆறாத ரணங்கள், தீக்காயங்கள், முகப்பருக்களால் வந்த கட்டிகள் போன்றவற்றை குணப்படுத்த முடியும்.

Sharing is caring!