முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா?

பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான்.

அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிற்நத தீர்வாக மஞ்சள் இருக்கிறது.

இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது.

மஞ்சள் கிழங்கு ஆவி

பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்துவிடுவார்கள். ஆனால் ஆண்கள் அப்படி செய்ய முடியாது.

அவர்கள் முகத்தை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவே கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியெல்லாம் இல்லை.

தன்னை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று யார் வேண்டுமானாலும் நினைக்கலாம். அப்படி இருக்கிறவர்களுக்காகத் தான்.

எப்படி பிடிக்கிறது?

மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்க தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கலந்து கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்கிற தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

எலுமிச்சை

ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள்.

ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகியிருக்கும். எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் எலுமிச்சை கழத்தை சாறெடுத்துவிட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டு விடாதீர்கள்.

அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.

Sharing is caring!