முகத்தை பளபளவென ஆக்க வேண்டுமா???

நமது அன்றாட சமையில் பயன்படுத்தப்படும் ஒரு சில காய்கறிகள் அழகுக்கலையிலும் பயன்படுத்தப்படுகின்றது.

அதில் தக்காளி சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள பயன்படும் ஒரு முக்கிய பொருளாகும்.

விலையுயர்ந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட இயற்கையான முறையில் அழகுப்படுத்த முடியும்.

தற்போது தக்காளியை கொண்டு முகத்தை எப்படி அழகுப்படுத்துவது என்பதை பார்ப்போம்.

  • ஒரு தக்காளியை நன்றாக பிசைந்து கூழ் செய்து தினமும் முகத்தில் தவறாமல் பயன்படுத்தி வாருங்கள். முகத்தில் பருக்களே வராது.
  • தக்காளி மற்றும் அதனுடன் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து நன்றாக கலந்து ஒரு காட்டன் உதவியுடன் முகத்தில் மசாஜ் செய்யுங்கள். இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தும்.
  • சருமத்தை மெருகேற்ற நினைத்தால் தக்காளி சாறுடன் தேன்கலந்து முகத்தில் தடவி வாருங்கள். விரைவில் பலனை பெற நினைத்தால் தினமும் இந்த கலவையை முகத்தில் தடவுங்கள். இவை உங்கள் சருமத்தை ஒளிரச் செய்து இயற்கை பேஷியல் செய்தது போலத் தோற்றத்தைத் தரும்.
  • ஒரு முழு தக்காளியை பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள். அதனை பிளாக்ஹெட்ஸுக்கு எதிராக வைத்து அழுத்த வேண்டும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் அதை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை தினமும்செய்து வருவதால் பிளாக்ஹெட்ஸு நீங்கிவிடும்.
  • தக்காளியை தயிருடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டுவிட்டு பின்னர் கழுவுங்கள். இது உடனடியாக உங்கள் சருமத்தை குளிர்வித்து பளபளக்கச் செய்யும்.
  • தக்காளியை எடுத்து இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதில் சிறிது சர்க்கரை சேர்த்து சருமத்தின் மீது மசாஜ் செய்யுங்கள்.அழகான மற்றும் பளபளப்பான தோற்றமளிக்கும்.

Sharing is caring!