முகத்தை பொலிவுடன் வைத்து கொள்ள வேண்டுமா?

முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்தது என்பது பலரும் அறிந்த தகவலே.

முட்டை சாப்பிட மட்டுமின்றி முக அழகிற்கு பெரிதும் உதவி புரிகின்றது.

இது முகத்தில் இருக்கும் கருமை, கருவளையம், முக சுருக்கங்கள் போன்றவற்றை போக்க முட்டையின் வெள்ளைக்கரு துணை புரிகின்றது.

அந்தவகையில் முட்டையை வைத்து முகத்தினை எப்படி பொலிவாக்கலாம் என பார்ப்போம்.

  • ஒரு சுத்தமான பவுலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரைமூடி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது.
  • முகத்தை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள், பின்பு தயார் செய்து வைத்துள்ள இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்யுங்கள். முகத்தில் அப்ளை செய்த பின்பு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள் பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும்.
  • ஒரு பவுலில் காய்ச்சாத பசும் பால் இரண்டு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள், பின் பஞ்ஜினை சிறிதளவு எடுத்து இந்த பாலில் நனைத்து முகத்தில் துடைக்க வேண்டும். பின் 2 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
  • ஒரு முட்டையின் வெள்ளைக்கருவினை உடைத்து எடுத்து பின்பு அவற்றில் ஒரு ஸ்பூன் சக்கரை பவுடர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் அகன்றுவிடும். மசாஜ் செய்த பின்பு சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
  • சிறிதளவு முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஒரு ஸ்பூன் சோள மாவு (corn flour) ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும், முகம் பொலிவுடன் காணப்படும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் ஒரு முறை செய்து வர நல்ல மாற்றத்தை உணரமுடியும்.

Sharing is caring!