முகம் நாளில் வெள்ளையாக மாற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இரவு உறங்கச் செல்லும் முன்பு ஏதேனும் பழச்சாறு அல்லது கிரீம் தடவி 10 நாட்கள் மசாஜ் செய்து விடுங்கள். இதனால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

உங்களின் கைவிரல்களின் நுனிப்பகுதியை நெற்றியிலிருந்து தாடை கழுத்துப் பகுதி வரை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்துவிடுங்கள். பிறகு தண்ணீரில் முகம் கழுவி கண்ணாடியில் பாருங்கள். உங்களுடைய முகம் முன்பு இருந்ததைவிட பளபளப்பாக காட்சியளிக்கும்.

உறங்கும்போது முகம், தலை பகுதியை நேராக வைத்து தூங்கி பழகவும். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் முகத்தை கோணலாக வைத்து தூங்கினால் வெகு விரைவில் தோல் சுருக்கம் அடைவதாக ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.

வெள்ளை நிற பிரெட் சாப்பிடுவதை நிறுத்தவும். இதில் உள்ள புரதங்கள் தோலுக்கு ஓவ்வாத தன்மையை ஏற்படுத்தி தோலின் பளபளப்பை கெடுக்கிறது. பருப்பு, பாஸ்தா போன்றவைகளையும் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

முகச்சுருக்கம் மறைய சில குறிப்புகள்:

விட்டமின் E மாத்திரைகளில் உள்ள எண்ணையை எடுத்து முகச்சுருக்கங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் தோல் சுருக்கம் மறைந்து முகம் அழகாகும்.
கடலைமாவு, எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் குழைத்து சோப்புப் பதிலாக உபயோகித்தால் தோல் பளபளப்பு பெறும்.

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புத்துணர்வு பெற கோதுமை தவிட்டை பயன்படுத்தலாம். எலும்மிச்சைப்பழச்சாறு, விதை நீக்கப்பட்ட நெல்லிக்காய் இரண்டையும் அம்மியில் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு நின்றுவிடும். இளநரை போய் முடி கறுகறுவென வளரும்.

வாரம் இருமுறை நீராவியில் முகத்தை காட்டி வர முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறு முகம் பளபளக்கும்.

கழுத்து கருமையை போக்க பீர்க்கங்காய் கூடு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) கழுத்தி சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவ, நாளடைவில் கழுத்து கருமை மாறிவிடும்.

Sharing is caring!