முடியுதிர்வால் அவதிப்படுகிறீர்களா?

ஆண் பெண் என்று அனைவரும் முடியுதிர்வால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இதனை தடுப்பதற்காக பல விலையுயர்ந்த எண்ணெய்கள் கடைகளில் கிடைக்கின்றபோதிலும் அவற்றினால் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கப்பெறுவதில்லை.

எனினும் இதனைத் தடுப்பதற்கான வழிமுறையினை குறைந்த செலவில் வீட்டிலேயே பின்பற்ற முடியும்.

அதாவது வெங்காய எண்ணெய் மூலம் முடியுதிர்வுப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

வெங்காய எண்ணெய் என்பது சாதாரண எண்ணெயில் வெங்காயத்தை கலப்பதுதான்.

வெங்காயத்தில் காணப்படும் விசேட புதரமானது முடியுதிர்வை தடுப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து அதனை முதலில் சூடாக்க வேண்டும்.

அதன் பின்னர் சீவிய வெங்காயத்தினை சிறிதளவும், கறிவேப்பிலை சிறிதளவும் கலக்கவும்.

பின்னர் மீண்டும் எண்ணெய் கறுப்பு நிறம் அடையும் வரை சூடாக்கவும்.

சூடாறிய பின்னர் வெங்காயம், கறிவேப்பிலையை வடித்து அகற்றி எண்ணெயை மாத்திரம் பிரித்தெடுக்கவும்.

இவ் எண்ணெயை இரவிலும், முடியை கழுவுவதற்கு சில மணி நேரம் முன்பும் தொடர்ந்து பயன்படுத்தி வர சிறந்த பெறுபேற்றினை பெற முடியும்.

Sharing is caring!