முடியை அடர்த்தியாக்க விலையுயர்ந்த பொருட்கள் அறவே வேண்டாம்!

எல்லோருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும். தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கத் தான் செய்யும்.

அதிலும் குறிப்பாக, தலைமுடியைப் பொருத்தவரையில் பளபளப்பாக ஆரோக்கியமான அடர்த்தியான முடி இருக்க வேண்டும் என்பது ஆண், பெண் இருவருக்குமே இருக்கக் கூடிய ஆசையாகத்தான் இருக்கிறது.

தலைமுடி பராமரிப்பை பொருத்தவரையில் முடியை எவ்வளவு பராமரிக்கிறாமோ அதைவிடவும் அதனுடைய வேர்க்கால்களுக்குத் தான் அதிகமாகத் தேவைப்படுகின்றன. தலைமுடியின் வேர்க்கால்களைப் பராமரிப்பது மிகமிக அவசியம்.

நம்முடைய முடியின் வேர்க்கால்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியது இந்த சின்ன விஷயத்தை தான்.

நீங்கள் பயன்படுத்துவது எந்த ஷாம்புவாக இருந்தாலும் சரி, அதில் கொஞ்சம் சர்க்கரை கலந்து தலையில் வேர்க்கால்களில் ஸ்கிரப் செய்யுங்கள்.

இப்படி சில நிமிடங்கள் ஸ்கிரப் செய்தால் தலையின் வேர்க்கால்களில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.

ஹேர் ஸ்கிரப்

பொதுவாகவே ஷாம்புவில் சிறிது சர்க்கரை சேர்த்தவுடன் அது நாம் முகத்தில் அப்ளை செய்யும் ஸ்கிரப்பைப் போன்று கொரகொரப்பாக மாறிவிடும். சிறிது நேரம் நன்கு ஸ்கிரப் செய்துவிட்டு தலைமுடியை அலசுங்கள்.

தலையில் உள்ள இறந்த செல்கள் யாவும் உதிர்ந்துவிடும்.

விலையுயர்ந்த பொருள்கள்

இவ்வளவு எளிமையாக வீட்டிலே உள்ள பொருள்களை வைத்தே மிக எளிமையாக தலைமுடியை பராமரிக்க முடியும் என்கின்ற பொழுது, இதற்கான ஏன் சிரமப்பட்டு விலையுயர்ந்த ஷாம்பு, ஹேர் ஸ்கிரப் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்? யோசிங்க. நாளைக்கே ஷாம்புல சர்க்கரை கலந்து தேய்க்க ஆரம்பிங்க.

Sharing is caring!