*அவை* *உடல்* *சூடு* ,_ *வைட்டமின்* *குறைபாடு* , *மற்றும்* *பரம்பரை* *காரணமும்* *முக்கிய பங்குண்டு. அதேநேரம் நீங்கள் உங்களின் தற்காப்பு உத்தியை செய்ய அதன் தாக்கம் குறைய வாய்ப்புண்டு* .

முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

நீங்கள் வாரத்திற்கு இருமுறை செம்பருத்தி இலையை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து தலைக்கு சோப்பு மற்றும் ஷாம்பூ போடாமல் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் செம்பருத்தி இலை குளிர் படம் கொடுக்கும் அதேநேரம் இது ஷாம்பூ போன்ற நுரைக்கும் தன்மை கொண்டது. எனவே ஷாம்போ, சோப்போ தேவையில்லை.

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

நேர் வகிடு எடுக்கும் இடத்தில் முடிகொட்டினா சின்ன வெங்காயச் சாறு தடவி ஒரு பத்து பதினைந்து நிமிசம் வச்சிருந்து குளிச்சிருங்க… அந்த இடத்தில சீக்கிரம் முடி வளர்வதை நீங்க கண்கூட பாப்பீங்க. (கொஞ்ச நேரம் கண்மூடி உக்காந்துக்குங்க.. வேற என்ன பண்ண… முடி வளரனுமே)

முடி கொட்டாமல் இருக்க முந்தின நாள் இரவே வெந்தயம் தயிரில் ஊறவைச்சுடுங்க. மறுநாள் அதை அரைச்சு தலையில் ஒரு அரைமணிநேரம் பேக் போட்டு குளிங்க. சாம்பு வேண்டாம் வெந்தயப்பேக்கே போதும். முடியும் நல்லா பளபளப்பாக இருக்கும். முடியும் கொட்டாது வளரவும் செய்யும்.

அடர்த்தி கம்மியா இருக்கிற மாதிரி இருந்தா…. வெந்தயம் இரண்டு ஸ்பூன், முட்டையின் வெள்ளைக்கரு ஒன்று, ஒரு வாழைப்பழம் , ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலும் போடலாம் … இவையனைத்தையும் போட்டு மிக்ஸியில் அடித்து அரை மணி நேரம் பேக் போட்டு தலைக்கழுவனால் போதும்.
கடைசி இரண்டு மக்கில் எலுமிச்சை சாறைப் பிழிந்து ஊற்றிக் கழுவனும். நார்மலா முட்டை வெள்ளைக்கரு ஸ்மெல் இருக்காது…ஆனாலும் ஸ்மெல் இருக்குமோன்ற சந்தேகத்திற்கு இந்த எலுமிச்சை தண்ணி. இந்த பேக் தலைமுடிக்கு நல்ல கண்டிசனர்,தலைமுடிக்கு தேவையான புரோட்டீன் எல்லாம் கிடைக்கும். நல்லா அடர்த்தியா முடி ஒன்னுமேல ஒன்னு ஒட்டாம அழகா இருக்கும்.

இந்த பேக் எல்லாம் போடறதுக்கு முன்னாடி நல்லா எண்ணெய் போட்டு கொஞ்ச நேரம் ஊற வைச்சிக்குங்க. நைட்டே போட்டு அடுத்த நாள் குளிச்சாலும் ஓகேதான். ஆனா கண்டிப்பா எண்ணை போட்டிருக்கனும்.

ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

சீதாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

வழுக்கையில் முடி வளர

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.

இளநரை கருப்பாக

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தலில் விரைவிலேயே நரை ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.

முடி வளர்வதற்கு

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரியும்.

புழுவெட்டு மறைய

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

குறிப்பு
ஹேர் டிரையர் அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும்.